தங்க Mask-உடன் விழாவில் கலந்து கொண்ட பிரபல பாடகி !!!

அமெரிக்காவில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான அமெரிக்கன் இசை விருதுகளில் பிரபல பாடகி Cardi B தங்க முகமூடி அணிந்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக விருதுகள் வழங்கும் விழாக்களுக்கு பிரபலங்கள் அணிந்து வரும் உடைகள் பெரிய பேசுபொருள் ஆகும். அந்த விழாவிற்கான பிரத்யேகமாக உடைகளை தயாரித்து நட்சத்திரங்கள் அணிவது வழக்கம்.

ஆனால் தங்கத்தினால் ஆன முகமூடியை அணிந்து Cardi B அமெரிக்க இசை விருதுகள் வழங்கும் விழாவிற்கு வந்துள்ளது ஒட்டுமொத்த ஹாலிவுட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விழாவிற்கு வந்த அனைவரும் விழாவை மட்டுமின்றி Cardi B-யையும் கண்டு ரசித்துள்ளனர்.
இந்த தங்க முகமூடியுடன் விழாவிற்கு வந்த Cardi B-யை முதலில் யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் முகமூடியை கழட்டி வைத்து மேடையில் அவர் பாடியபோது தான் தங்க Mask-க்கு சொந்தக்காரரை விழாவிற்கு வந்தவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
அதுமட்டுமின்றி இந்த விழா ஆரம்பித்து முடிவதற்குள் 7 வித்தியாசமான உடைகளை Cardi B மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் விருது வாங்கியவர்களைப் பற்றி பேசியதை விட Cardi B-ன் உடைகளைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசுபவர்களே அதிகம்.
Cardi B வித்தியாசமான உடைகள் அணிந்து அமெரிக்க இசை விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவுகளை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு Deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.