• June 17, 2024

தன்னைத் தானே திருமணமும் விவாகரத்தும் செய்து கொண்ட பிரேசில் மாடல் !!!

 தன்னைத் தானே திருமணமும் விவாகரத்தும் செய்து கொண்ட பிரேசில் மாடல் !!!


உலகில் பல வகையான திருமணங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு பின்னர் தன்னைத் தானே விவாகரத்தும் செய்து கொண்ட ஒரு பெண்ணின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

பிரேசில் நாட்டில் பிரபல மாடல் அழகியான கிரிஸ் கலேரா இந்த வருடம் செப்டம்பர் மாதம் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். தனிமையில் இருப்பது மிகவும் சுவாரசியமான ஒன்று என்பதை இந்த உலகிற்கு நிரூபிக்கவே இந்த சுய திருமணத்தை அவர் செய்துகொண்டுள்ளார்.


Model who 'married herself' says Arab Sheikh offered £365k to wed him  instead - thejjReport

சுய திருமணம் ஆகி 90 நாட்கள் கழித்து தன்னை தானே விவாகரத்து செய்துள்ளதாக கிரிஸ் கலேரா அறிவித்துள்ளார். இந்த திருமணத்திற்கு பிறகு புதிதாக யாரையோ தான் விரும்புவதாகவும், அதன் காரணத்தினாலேயே விவாகரத்து செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அந்த ஸ்பெஷலான நபரை பார்த்தபோது காதல் மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது”, என கலேரா கூறியுள்ளார். இதற்கு முன் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டபோது, “நான் மனதளவில் முதிர்ச்சி அடைந்து விட்டேன். தனிமையில் இருப்பது தான் எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே நான் என்னையே திருமணம் செய்துகொண்டு அதை கொண்டாடுகிறேன்.”, என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Brazilian Model Marries Herself After Giving Up on Men, Invites Her Friends  For Wedding Ceremony

தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் ஏற்கனவே கிரிஸ் கலேராவுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த திருமணத்தை புறக்கணித்தே சுய திருமணத்தை கலேரா செய்துகொண்டார். ஆனால் தற்போது மனம் மாறிய கலேரா அவரை அவரே விவாகரத்தும் செய்துள்ளார்.

கிறிஸ் கலேரா செய்துள்ள இந்த திருமணத்திற்கும், விவாகரத்திற்கும் உலகெங்கிலுமுள்ள நெட்டிசன்கள் தங்களது காரசாரமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.