நூதன முறையில் சிரித்து போராட்டம் நடத்திய மக்கள் !!!

சாலைகள் ஒழுங்காக கட்டமைக்கப்படாததற்கு மக்கள் வீதியில் இறங்கி போராடுவது வழக்கமே. ஆனால் சாலைகளை சீரமைக்க நூதன முறையில் ஒரு போராட்டத்தை போபால் மக்கள் கையாண்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 200 மீட்டர் நீளமுள்ள சாலை ஒன்று மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனை சீரமைக்க மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வந்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து தங்களது கைகளை கூப்பி சிரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மக்கள் சிரித்து போராடிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நூதன போராட்டத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு நபர், “கடந்த இரண்டு வருடங்களாக இந்த சாலை இப்படித்தான் இருக்கிறது, அரசாங்கம் மூன்று கோடி நிதி ஒதுக்கிய போதும் இந்த சாலையை சீரமைக்க வில்லை. எனவே நாங்கள் இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.
- “டாஸ்மேனியன் புலி அழிந்து போன விலங்கினம்..!” – மீண்டும் பராக்..பராக்..
- “இரும்புச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள்..!” – பெண்கள் அவசியம் சேர்க்க வேண்டியது..
- “மனித மூளைக்குள் 3000 எலக்ட்ரோட் சிப்..!” – எலான் மஸ்க்கிற்கு பச்சைக்கொடி காட்டுமா அரசு..
- 4.76 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டை – ஜாம்பியாவில் கண்டுபிடிப்பு..
- “வளரும் நந்தி.. வற்றாத குளம்.. மர்மமான யாகந்தி கோவில்..!” – ஓர் அலசல்..
கத்தியின்றி ரத்தமின்றி சிரித்தும் போராடலாம் என போபால் மக்கள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என இந்த போராட்டத்தைப் பற்றி பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
போபால் மக்கள் சாலைகளை சீரமைக்கக் கோரி சிரித்து போராடிய வீடியோவை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.