• September 8, 2024

“ராமாயணத்தில் சொல்லப்பட்ட சஞ்சீவினி மூலிகை..!”- ரோடியோலா மூலிகைச் செடியா?

 “ராமாயணத்தில் சொல்லப்பட்ட சஞ்சீவினி மூலிகை..!”- ரோடியோலா மூலிகைச் செடியா?

Rhodiola

இராவணனுக்கும், ராமனுக்கும் நடந்த போரில் ஒரு கட்டத்தில் லக்ஷ்மணன் மயங்கி விழுந்த போது லக்ஷ்மணனின் மயக்கத்தை தெரிவிக்க சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்து, அதில் இருந்த மூலிகை கொண்டு லக்ஷ்மணனுக்கு மருத்துவ செய்யப்பட்டு கடைசியில் லட்சுமணன் விழித்து எழுந்த செய்தி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

உயிரைக் காக்கக்கூடிய அற்புதமான இந்த சஞ்சீவினி மூலிகை இன்றும் இமய மலைப் பகுதிகளில் வளருவதாக நம்பப்படுகிறது. மேலும் புராணத்தில் கூறப்பட்டிருக்கும் சஞ்சீவினி மூலிகை தானா? ரோடியோலா மூலிகை என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது.

Rhodiola
Rhodiola

இந்த மூலிகையை மலைப்பகுதியில் இருக்கக்கூடிய மனிதர்கள் பயன்படுத்துவதால் அதற்கு தக்கவாறு இவரது இவர்களது உடல் தகவமைப்பு மாறி உள்ளதாகவும், இதன் மூலம் கதிர் இயக்க பாதிப்புகளை தடுக்க முடியும் என்ற கருத்துக்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.

விஞ்ஞானிகளின் பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு இந்த சஞ்சீவினி மூலிகை ரோடியோலா மூலிகைச் செடியாக இருக்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்து உள்ளது. லடாக் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் இந்த மூலிகையை “சோலோ” என்று அழைத்து வருகிறார்கள்.

மேலும் இந்த மூலிகை செடியின் இலைகளை கீரை போல் சமைத்து இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் என்கிறார்கள். லேப் பகுதியில் உயர் மலைப் பகுதியில் ராணுவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகை செடியின் மருத்துவ குணங்கள் பற்றி ஆய்வினை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

Rhodiola
Rhodiola

இந்த ஆய்வில் உயிர் வேதி ஆயுதம் வெளியிடும் காமா கதிர்கள் உடலில் செல்லாதவாறு இந்த மூலிகையால் தடுக்க முடியும் என்ற ரகசியத்தை ராணுவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆர்பி ஸ்ரீ வஸ்தவா கூறியிருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மேலே பகுதியில் உள்ள இந்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த மூலிகை குறித்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த மூலிகை குறைந்த காற்றழுத்தம் ஆக்ஸிஜன் குறைவு ஆகியவற்றால் அவதிப்படக்கூடிய ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மன அழுத்தத்தையும் குணப்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார்.

Rhodiola
Rhodiola

இதனை அடுத்து இந்த மூலிகை சஞ்சீவினி மூலிகையாக இருக்குமோ என்ற கருத்துக்கள் பலரது மத்தியிலும் தற்போது பேசும் பொருளாகி விட்டது என கூறலாம். பசியை தூண்டக்கூடிய அம்சமும் இந்த மூலிகையில் நிறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

உங்களுக்கு இந்த மூலிகைகளைப் பற்றி வேறு ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.