“சர்வாதிகாரி ஹிட்லர் தேடிய மாய நகரம் ஷாம்பலா (SAMBALA) ..!” – புதைந்திருக்கும் மர்மம் என்ன?
இமயமலை தொடர்கள் இருக்கின்ற பகுதியில் இந்த ஷாம்பலா (SAMBALA) நகரம் இருப்பதாக பெருவாரியான மக்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். மாய நகரமான இந்த ஷாம்பலா என்ற பெயருக்கு அமைதியான நகரம் என்று கூறப்படுகிறது.
இந்த மாய நகரத்தைப் பற்றி பல்வேறு வகையான செய்திகள் பல நூற்றாண்டுகளாக மக்களிடையே உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் திபெத்தில் புத்த மதத்திற்கு முன்னால் புழக்கத்தில் இருந்த ஷாங் சூ கலாச்சாரம் தொடங்கியதற்கு அடுத்து பின்பற்றி வந்த காலச்சக்கர தூண்கள் மற்றும் இந்து இதிகாசத்தில் விஷ்ணு புராணத்தில் பல பகுதிகளில் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் மகாபாரதத்தில் இந்த நகரத்தை பற்றிய தகவல்கள் மறைமுகமாக உணர்த்தப்படுவதாக கூறி வருகிறார்கள். இதற்குக் காரணம் இந்த மாய நகரமானது நம் நாட்டில் மட்டுமல்லாமல் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் பிரசித்தி பெற்ற பேசும் பொருளாக உள்ளது.
ஆசிய கண்டமே இந்த நகரத்தை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதின் மர்மம் என்ன என்பது இன்றுவரை பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்து மதத்தின் அடிப்படையில் விஷ்ணு புராணத்தின் படி, விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி இந்த ஷாம்பலா நகரத்தில் தான் பிறப்பார் என்று கூறப்பட்டு இருப்பது தான் அனைவரது ஆச்சரியத்திற்கும் காரணம்.
அப்படி கல்கி அவதாரம் எடுத்து, இந்த நகரத்தில் பிறக்கும் போது ஷாம்பலாவின் 25 ஆவது அரசு ஆட்சி நடக்கும் சமயத்தில் தான் இந்த உலகம் அதாவது கலியுகம் முடிவடையும் என்பது சுவாரசியத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் பகவான் கண்ணன் கூறியபடி எப்போது அதர்மம் அதிகமாகிறதோ, அங்கு ஒரு அவதாரம் உருவாகும். அதன்படி பூமியில் அதிகமாக அதர்மம் நடக்கும்போது ஷாம்பாலாவில் பிறக்க போவதாக தெரிய வந்துள்ள கல்கி அவதாரம் ஒரு லட்சம் வீரர்களுடன் பூமிக்கு வந்து தீயவர்களை அழித்து பூமியில் நீதியையும், நேர்மையையும், அமைதியையும் நிலை நாட்டுவார்கள்.
அது சமயம் பூமி கலி யுகத்தின் முடிவில் அனைத்தையும் இழந்து பிறகு மீண்டும் சத்ய யுகம் உருவாகும் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.இது சத்தியமாக நடப்பது போல் சித்தரிக்கப்படுகிறது.
கலியுகத்தின் முடிவு பற்றி இந்து மதம் மட்டுமல்லாமல், கிறிஸ்துவ மதம், யூத மதம் போன்றவற்றிலும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இஸ்லாம் மதத்திலும் இது போன்ற தகவல்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் கிறிஸ்துவ மதத்தில், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என இதனை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அது போலவே யூத மதத்தில் திசியாவின் இரண்டாம் வருகையை அவர்கள் நம்புகிறார்கள். உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான மதங்கள் இந்த கல்கி அவதாரம் பற்றிய சில விஷயங்களை ஒத்துள்ளது என்று கூறலாம்.
நீங்கள் நினைக்கலாம், இந்த மாய நகரம் உண்மையாக உள்ளதா என்று. அதற்கான பதிலை இனி விரிவாக பார்க்கலாம். திபெத்திய புத்தமத தலைவர்கள் இந்த நகரம் உண்மையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த நகரத்தை பற்றி அவர்கள் சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்து இருப்பது அனைவருக்கும் மலைப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாய நகரம் பார்ப்பதற்கு ஒரு சிறிய கிராமம் போல் இருக்காது. மிகப் பெரிய சாம்ராஜ்யமாக பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த நகரத்தின் அமைப்பை பொருத்தவரை எட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலர் போல இருக்குமாம்.
இந்த தாமரை மலர்களைச் சுற்றி பனிமலைகள் சூழ்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் எட்டு பிரிவுகளைக் கொண்ட மக்கள் இங்கு வசிப்பார்கள் என்று கூறுகிறார்கள்.
மேலும் இங்கு வசிக்கக்கூடிய மக்களை எந்தவிதமான நோய்களும் தாங்காமல் 100 வருடங்கள், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களாக இருப்பார்கள் என்றும் செல்வத்திற்கு பஞ்சம் இல்லாத செல்வந்தர்களாக வாழ்வார்கள்.
இந்த மாய நகரத்தை தேடிப்போய் பலரும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாமல் உயிரை விட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல்களையும் அவர்களை கூறி இருக்கிறார்கள்.
மேலும் இந்த இடம் எங்கு இருக்கும் என்று கணித்த வகையில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளது.. உதாரணமாக இமயமலை பகுதிகளில் உள்ளது என்று கூறுவது போலவே, பஞ்சாபின் சட்லஸ் பள்ளத்தாக்கில் மாய நகரம் இருக்கலாம் என்றும் இமாச்சலப் பிரதேசத்தின் மற்றொரு பகுதியில் கூட இது இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் செவி வழி செய்திகள் நிறைய வந்துள்ளது.
இது போலவே மங்கோலியாவில் சொல்லப்பட்ட கதைகளில் இந்த ஷாம்பலா நகரமானது சைபீரிய பள்ளத்தாக்குகளில் இருக்கலாம் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.
சூழ்நிலையில் இந்த நகரம் எங்கு இருக்கும் என்று பலவிதமான கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில் திபெத்தை சுற்றி இருக்கக்கூடிய பகுதியில் தான் இந்த நகரம் இருக்கும் என்று பலரும் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் திபெத்தின் ஒரு பகுதியில் இந்த நகரத்திற்கு செல்வதற்கான பாதை அமைந்திருப்பதாகவும், ஆனால் அந்தப் பாதையை பாதுகாக்க கூடிய பணியை எட்டி என்ற ஒரு உயிரினம் மேற்கொண்டு உள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.
இந்து மதத்தில் எப்படி நன்மை செய்தவர்கள் சொர்க்கத்துக்கு போவார்களோ, அதுபோலவே திபெத்திய புத்த மத கோட்பாடு படி இந்த நகரத்தை ஒருவர் அடைய கர்ம பலன்களை சீரிய முறையில் செய்திருந்தால் மட்டுமே மாய நகரம் கண்ணுக்கு புலப்படும் என்பதை தெளிவாக உணர்த்துகிறார்கள்.
மாய நகரம் உள்ளதா? என்பதை கண்டறிய ஹிட்லர் ஒரு குழுவையும் மற்றொரு குழுவில் திபெத்திய தம்பதிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மலை தொடர்களை சுற்றி வந்திருக்கிறார்கள். இப்படி சுற்றி வந்து அவர்களால் இந்த மாய நகரம் பற்றிய அடையாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை அடுத்து இரண்டாவது முறையாக ஹிட்லரின் உத்தரவின் பெயரில் சென்ற இஸ்கார்பர் தலைமையில் ஒரு குழு 1938 -39 ஆம் ஆண்டுகளில் அந்த மலைத்தொடர்களில் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்டார்கள். எனினும் மாய நகரம் பற்றி அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக அதார்தா என்ற மற்றொரு நகரத்தை பூமிக்குள் இருந்து கண்டுபிடித்தார்கள்.
இந்த இரண்டு குழுவும் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு தேடுதல் பணியை செய்து வந்த போதும், இன்னும் அந்த மாய நகரம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இதைத் தேடிச் சென்ற பலரும் திரும்பவில்லை என்பதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
யுகங்கள் நான்கு உண்டு என்பதை நம்பக்கூடிய அனைவரும் கலியுகத்தின் முடிவில் இந்த நகரத்தில் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி பிறக்கக் கூடியது உண்மை என்று நம்புவதால், இந்த ஷாம்பலா இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.