“இந்தியப் பெருங்கடலில் கிராவிட்டி ஹோல்..!” – விளைவு என்ன?
இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் 900 கிலோ மீட்டர் தொலைவில் 300 கிலோ மீட்டர் ஆழத்தில் கிராவிட்டி ஹோல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இந்த ராட்சச ஈர்ப்பு துளையான கிராவிட்டேஷனல் ஹோல் இந்திய பெருங்கடலில் 3 மில்லியன் சதுர மீட்டருக்கும் மேல் அதிக அளவு பரப்பளவைக் கொண்டிருப்பதாக இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
இந்தத் துளையானது இந்திய பெருங்கடலின் இலங்கைக்கு தெற்கு அமைந்துள்ளதாக பெங்களூருவை சேர்ந்த ஐஐஎஸ்சி எனப்படும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் மைய விஞ்ஞானிகள் உறுதி செய்து இருக்கிறார்கள்.
இந்த பகுதிகளில் இயல்பாக இருக்கக்கூடிய ஈர்ப்பு விசையானது சற்று குறைவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் கடல் மட்டம் உலக சராசரியை விட 100 மீட்டர் அளவு தற்போது குறைந்துள்ளதாக கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இது போன்ற ஈர்ப்பு துளை எதனால் ஏற்பட்டது. இதனால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் அது நிமித்தமான அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அவர்களின் அந்தக் கூற்றுப்படி 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிராவிட்டி துளை உருவாக தொடங்கி இருக்கலாம் என்று புவி இயற்பியல் ஆய்வுகள் மூலம் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இத்தகைய துளை ஏற்படுவதற்கான காரணம் போல்டன் ராக் எனப்படும் இறுகிய பாறை குழம்பின் பற்றாக்குறை என்பதை ஐஎஸ்எஸ்சி- ஐ சேர்ந்த புவி இயற்பியல் ஆராய்ச்சியாளர்களான டெபன்ஜன் பால் மற்றும் பேராசிரியர் அட்ரீயி கோஷ் கூறியிருக்கிறார்கள்.
பெங்களூரில் இருக்கின்ற இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் 140 மில்லியன் ஆண்டுகளில் தட்டு டெக்டோனிக் இயக்கங்களை சரி செய்து ஈர்ப்பு துளையின் தோற்றத்தை கண்டறிய கணினி உருவகப்படுத்தலை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் இது ஆப்பிரிக்காவின் கீழ் உள்ள மேன்டில் வழியாக மூழ்கி இந்திய பெருங்கடலுக்கு அடியில் இருந்து ஏற்படுகின்ற மாற்றங்களை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சி செய்திருக்கிறார்கள்.
வருங்காலங்களில் இவர்கள் ப்ளூங்கள் ஜியோ லோகோவுக்கு அருகில் உள்ள மேன்டில் அமைப்புடன் ஏற்படுகின்ற எதிர்மறை புவியியல் ஒழுங்கின்மை உருவாவதற்கு காரணம் இதுதான் என்பதை கண்டறிந்த நிலையில் இனி வரும் காலத்தில் இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்று நம்பலாம்.