• October 7, 2024

“அட..அஸ்திவாரமே இல்லை..!”.  – பாண்டியர்கள் கட்டிய வெட்டுவான் கோயில்..!

 “அட..அஸ்திவாரமே இல்லை..!”.  – பாண்டியர்கள் கட்டிய வெட்டுவான் கோயில்..!

Vettuvan Koil

ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் அஸ்திவாரத்தை உறுதியாக போட வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து செதுக்கப்பட்ட கோயில் பற்றி விவரங்களை உங்களுக்கு இந்த கட்டுரையில் தெளிவாக கூறப் போகிறேன்.

அது எப்படி அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக என்று நீங்கள் எண்ணுவது மிக நன்றாக தெரிகிறது. ஆனால் அப்படிப்பட்ட கோயில் தமிழ்நாட்டில் அதுவும் பாண்டிய மன்னர்களால் கட்டியது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

Vettuvan Koil
Vettuvan Koil

இந்த கோயிலானது தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலையில் உள்ளது. கிபி எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனான மாறன்ஞ்சடையன் என்பவரால் இந்த ஆரம்பிக்கப்பட்ட இந்த கோயில் முற்றுப்பெறாமல் அப்படியே பாதியில் நின்று விட்டது.

கழுகுமலையில் இருக்கும் இந்த கோயிலை தான் வெட்டுவான் கோயில் என்று கூறுகிறார்கள். மாபெரும் பாறைகளை குடைந்து கட்டப்பட்டிருக்கின்ற இந்த கோவிலை தென்னிந்தியாவின் எல்லோரா என்று அனைவரும் அழைத்து வருகிறார்கள்.

பண்டைய காலத்தில் கழுகுமலை, அரைமலை என்று அனைவரும் அழைத்திருக்கிறார்கள். மேலும் இந்த கோயிலானது கழுகுமலையின் கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.

மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்டு கொண்டு இருந்தபோது புதுக்கோட்டையில் இருந்து கன்னியாகுமரி வரை அவர்கள் ஆட்சி செய்து உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கிபி எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டு மன்னர்கள் இந்தப் பகுதியில் இந்த கோயிலை கட்டி இருக்கலாம், என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

Vettuvan Koil
Vettuvan Koil

வடநாட்டில் எல்லோரா என்று எல்லோரும் அழைக்கப்பட கூடிய மிகச்சிறப்ப சிறந்த குடைவரைக் கோயில்களை இந்தப் பகுதியில் நீங்கள் பார்க்கலாம். மேலும் அதிக அளவிலான சமணர்களின் சிற்பங்களை இந்த கோயிலில் பார்க்க முடியும். தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் இது போன்று சமணர்களின் சிற்பங்களை நீங்கள் பார்க்க முடியாது.

பராந்தக நெடு சடையான் அல்லது முதல் வரகுண பாண்டியன் காலத்தில் தான் இங்கு சமணப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோயில் மற்றும் எல்லோரா கோயில்களில் இருப்பது போலவே சிற்பங்கள் இந்த கழுகுமலை வெட்டுவான் கோயிலிலும் அமைந்துள்ளது. மேலும் இது ஒரே கல்லால் செதுக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

வெட்டுவான் கோயில் அஸ்திவாரம் எதுவும் இல்லாமல் பாறையை பா வடிவத்தில் 7 புள்ளி 50 மீட்டர் ஆழத்துக்கு சமமாக வெட்டி எடுத்து பின் அதன் நடுப்பகுதியை கலசமாக மாற்றி இருக்கிறார்கள். இந்த கோயிலுக்கு தேவையான சிகரம், தளம், கூரை, சுவர் போன்றவை மேலிருந்து தான் கீழ் நோக்கி குடையப்பட்டுள்ளது என்பது வியக்கத்தக்க விஷயமாக உள்ளது.

Vettuvan Koil
Vettuvan Koil

இந்தக் கோயிலை பார்க்கும்போது அகழ்வாராய்ச்சிக்காக கண்டெடுக்கப்பட்ட கோயிலைப் போலவே உள்ளது. இந்தக் கோயிலிலும் சிவன் தான்  முதல் கடவுளாக வழிபடப்பட்டு இருக்கிறார்.

எப்படி கைலாசநாதா கோவிலில் சிற்பங்கள் உள்ளதோ, அது போலவே இந்த கோயிலிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டு பாதி முற்றுப்பெறாத நிலையில் இந்த கோயில் உள்ளதால் இதை தென்னிந்தியாவின் மினி கைலாச என்று பலரும் அழைக்கிறார்கள்.

அங்குள்ள சிவனும் கைலாசநாதர் கோயிலில் அமைந்திருப்பது போல கிழக்கு நோக்கி தான் அருள் பாலிக்கிறார். மேலும் சிவனும் பார்வதியும் ஒரு உரையாடுவது போல இங்குள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.