ஆச்சரியப்படுத்தும் அரிய அணில் இனம்..! – சிப்மங்க்
அணில் இனத்தில் பல வகையான வகைகள் உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் அந்த வரிசையில் சிக்மன் என்ற இந்த அரிய இனமான அணில் அமெரிக்காவில் அதிக அளவு காணப்படுகிறது.
இந்த அணில் இரண்டு கண்கள் மற்றும் காதுகளைக் கொண்டிருக்கக் கூடியது உடல் முழுவதும் ரோமங்களால் சூழப்பட்டு இருக்கும் வால் மென்மையான நகங்கள் இருப்பது இதன் தனி சிறப்பாகும்.
மேலும் இந்த உயிரினம் ஆனது எட்டு முதல் 16 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக விளங்கும் இதில் வாலின் நீளம் மட்டும் ஆறு முதல் 14 சென்டிமீட்டர் வரை இருக்கும்.
இந்த சிப் மந்த்ஸ் அணிலானது பிக்னி அணில்களின் வரிசையில் வரும் தரையில் துள்ளி குதித்து ஆட்டம் போடக்கூடிய தன்மை கொண்டது. இந்த வகை அணில்கள் கடல் மட்டத்திலிருந்து 3900 மீட்டர்கள் வரை உயரமான இடங்களில் இருக்கும் பாறைகள் கற்பாறைகள் நிறைந்த பகுதிகளில் இருக்கக்கூடிய இனங்கள் என்று கூறலாம்.
மேலும் இவை ஆண் பெண் புல்வெளிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளிலும் வாழ்கிறது. வட அமெரிக்காவின் இலையுதிர் காடுகளில் இந்த வகை அணில்கள் உள்ளது மேலும் இதில் மிகப் பெரிய அணைகளும் காணப்படுகிறது இவை சுமார் 70 முதல் 142 கிராம் எடை உள்ளது மேலும் 14 முதல் 19 சென்டிமீட்டர் நீளமும் குட்டையான வாலும் கொண்டது.
ரோமங்கள் பார்ப்பதற்கு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் மேலும் உடலில் நீளமான ஐந்து அடர் பழுப்புக் கோடுகளால் பார்ப்பதற்கு மிக அழகான அணிலாக இது இருக்கும் இந்த ஐந்து கோடுகளில் இரண்டு சாம்பல் பருப்பு நிலத்திலும் மற்றவை விண் நிற கோடுகளாகவும் இருப்பது தான் இதனுடைய தனி சிறப்பு என்று கூறலாம்.
மர அணிலை போல பழக்கவழக்கங்களைக் கொண்டு இருக்கக்கூடிய இந்த அணில் கூடு கட்டுவதை தவிர்த்து விட்டு மரங்களில் அமர்ந்த நிலையில் தூங்கக்கூடிய தன்மை கொண்டவை.
சிப்மங்க்ஸின் என்ற சொல்லுக்கு பொருள் சிலிர்ப்பு என்பதாகும். இவை பெரும்பாலும் விதைகள் வெறி மற்றும் பூஞ்சைகள் பூச்சிகள் போன்றவற்றை விரும்பி உண்கிறது.
இது மட்டுமல்லாமல் இவை தனது கன்னத்தில் இருக்கக்கூடிய பைகளில் கொட்டைகளை சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய பழக்கத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் குளிர் காலத்திலும் இவை உணவை சேமித்து வைத்து ஒன்னும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வகை அணில்களின் உடல் வெப்பநிலையானது 35 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் மேலும் இனப்பெருக்க காலத்தில் இது இரண்டு முதல் எட்டு குட்டிகள் வரை போடும். இதனுடைய கர்ப்ப காலம் ஒரு மாதாகும்.