• October 5, 2024

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் புனித் ராஜ்குமார் ! வைரலாகும் பழைய வீடியோ !

 ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் புனித் ராஜ்குமார் ! வைரலாகும் பழைய வீடியோ !

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் அவரது உயிருக்கு உயிரான ரசிகர்களுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவரது மறைவுக்குப் பின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை வெளியிட்டனர். அவரது ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றே சொல்லலாம்.

When Kannada star Puneeth Rajkumar asked people not to compare him with his  dad Rajkumar: 'He is different' - Hindustan Times

புனித் ராஜ்குமாரின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பிரபுதேவா, யாஷ் போன்ற பல பிரபலங்கள் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

நேற்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது இவருக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியவில்லை. மனிதனின் வாழ்க்கை எந்த நிலையிலும் நிரந்தரமானது அல்ல என்பதை புனித் ராஜ்குமாரின் மறைவு நமக்கு உணர்த்துகிறது.

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் புனித்தின் ரசிகர்கள் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது புனித் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அவர்கள் முன் தோன்றுகிறார். இந்த வீடியோவை அவரது மறைவுக்குப் பின் பார்க்கும்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வழிகிறது.

புனித் ராஜ்குமாரின் அந்த வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தீப் டாக்ஸ் தமிழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.