• December 3, 2024

ஆயிரம் அதிசயம் அமைந்தது சூப்பர் ஸ்டார் ஜாதகம் !!!

 ஆயிரம் அதிசயம் அமைந்தது சூப்பர் ஸ்டார் ஜாதகம் !!!

திரைத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 61வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கொடுக்கப்பட்டது. இந்த விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதே திரைத்துறையை சேர்ந்த பலரும் அவரது ரசிகர்களும் சூப்பர்ஸ்டாருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அவர் விருது பெறும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விருது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் விருதை வழங்கிய மத்திய அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சூப்பர்ஸ்டார் தனது குருநாதரான இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களுக்கும், தனது அண்ணன் சத்யநாராயணராவ் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Rajinikanth presented with Dada Saheb Phalke Award; Thanks his fans and  people of Tamilnadu for thei- Cinema express

வந்த பாதையை என்றுமே மறவாத சூப்பர்ஸ்டார் அவர்கள் நடிப்புத் துறையில் தான் கால் பதிக்க முக்கிய காரணமாக இருந்த தனது நண்பர் ராஜ்பகதூர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு மட்டுமின்றி விருது வழங்கும் விழாவில் பேசிய ரஜினி தன்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழில் பேசிய போது அரங்கத்தில் கைதட்டல்களும் ஆரவாரமும் சற்று அதிகமாகவே இருந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விருது வழங்கும் விழாவில் பேசிய வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

Dadasaheb Phalke Award for Rajinikanth, selected by jury including Mohanlal  - CINEMA - CINE NEWS | Kerala Kaumudi Online

ரஜினிகாந்த் அவர்களின் நன்றி தெரிவிக்கும் ட்விட்டர் பதிவையும் கீழே காணுங்கள்.

இந்திய கலைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு deep talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.