“மீண்டு வருவோம்”- Captain கோலி நம்பிக்கை !!!

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் எப்பொழுதுமே வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் ஆகவே அமைந்துள்ளது. அந்த வகையில் டி20 உலக கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் நேற்று பலப்பரீட்சை செய்தது.

இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்காத இந்தியா நேற்றைய போட்டியில் படும் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது. 152 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக இந்தியாவை வீழ்த்தியது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை இப்போட்டியின் முடிவு அளித்துள்ளது. உலக கோப்பைக்கு முன்னால் நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியால் சூப்பர் 12 கட்டத்தின் முதல் போட்டியில் ஜொலிக்க முடியவில்லை.

இந்திய அணியின் கேப்டன் ஆன கோலி, “நாங்கள் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த வில்லை. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வாரி வழங்கி விட்டோம். போட்டியின் இரண்டாம் கட்டத்தில் பந்தும் சரியாக பேட்டிற்கு வரவில்லை. எனினும் இது முதல் போட்டியே நாங்கள் மீண்டும் அணியை வலுப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.”, என போட்டிக்குப் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
டி20 உலக கோப்பையில் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆறுதல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
இனி வரும் போட்டிகளில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக்கோப்பையை தட்டி செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்து வரும் மாதங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணிக்கு deep talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.