• October 12, 2024

தடைகளை தட்டி விடாமல் தாண்டிய Smart நாய் !!!

 தடைகளை தட்டி விடாமல் தாண்டிய Smart நாய் !!!

இன்றைய சமூக வலைதளங்களானது குறிப்பிட்ட வசீகரத்தை கொண்ட நாய்களின் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. செல்லப் பிராணிகளின் முட்டாள் தனமான குறும்புகள் அடங்கிய வீடியோ பதிவுகள் இணையங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தனக்கு முன்னால் நீளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை தட்டி விடாமல் அழகாக கடந்து வந்த ஒரு நாயின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

கோல்டன் ரெட்ரீவர் என சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான நாய்களில் ஒன்று தான் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நாய். அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்து சற்று நேரம் சிந்தித்த படி இந்த நாய் நின்று கொண்டிருக்கிறது.

பின்னர் பொறுமையாக எந்த பொருளையும் தட்டி விடாதவாறு தனது முதலடியை எடுத்து வைத்தது. அதற்கு பின் சரியாக கணித்து இந்த பொருட்களை எல்லாம் சுலபமாக இந்த செல்ல நாய் தாண்டியது. இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

இந்த அழகிய நாய் செய்த அறிவாளி தனமான காரியத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் பாராட்டியும் வருகின்றனர். இந்த நாய் மிகவும் ஸ்மார்ட்டான நாய் என பலரும் இந்த நாயை கொண்டாடுகின்றனர்.

மார்லி எனும் இந்த நாயின் வீடியோ அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.