• November 14, 2024

Cobra-வை குளிப்பாட்டும் அதிசய மனிதர் !!!

 Cobra-வை குளிப்பாட்டும் அதிசய மனிதர் !!!

பொதுவாக பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு பயம் அளிக்கக் கூடிய ஒரு உயிரினமாக தான் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாம்புடன் நட்பு புரியும் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உலகில் எத்தனையோ விலங்குகள் இருந்தாலும் பாம்பை கண்டு அஞ்சாதவர்கள் ஒரு சிலரே. அதிலும் பாம்பை வீட்டில் செல்லப் பிராணியைப் போல் வளர்ப்பவர்கள் மிகவும் குறைவு.

உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு என கருதப்படும் Cobra பாம்பையே குளிப்பாட்டி விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் ஒரு விசித்திர பாம்பு பிரியர். இந்த வீடியோவில் பார்ப்பதற்கே பயங்கரமான நீளமான கோப்ரா பாம்பிற்கு இந்த வீரமான வாலிபர் ஒரு பக்கெட் தண்ணியை அதன் மீது ஊற்றி பாம்பை குளிக்க வைக்கிறார்.

King cobra - Wikipedia

இந்த வீடியோ பார்ப்பதற்கு விசித்திரமாகவும் வினோதமாகவும் இருக்கிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பக்கெட்டில் இருக்கும் தண்ணீரை பாம்பின் மீது ஊற்றும் போது அந்தப் பாம்பும் அந்த மனிதரை தாக்க முயற்சிக்காமல் அமைதியாக படம் எடுத்தபடி நின்று கொண்டிருப்பது வியப்பளிக்கிறது. இந்த வீடியோவை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் கண்டுகளித்துள்ளனர்.

கோப்ராவை குளிப்பாட்டும் விசித்திர நபரின் வீடியோ அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு deep டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.