Air India குறித்து உருக்கமாக பதிவிட்ட ரத்தன் டாட்டா !!!

இந்திய அரசால் இயக்கப்பட்டு வந்த Air India நிறுவனம் சமீபத்தில் கடன் காரணமாக ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை 18000 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்திற்கு எடுத்த பிறகு ரத்தன் டாட்டா தனது சமூக வலைதள பக்கங்களில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தை முதலில் நிறுவியது டாட்டா குழுமம் தான்.

68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாட்டா நிறுவனத்திற்கு ஏர் இந்தியா கிடைத்துள்ளது அந்நிறுவனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை மேலும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்வோம் என ரத்தன் டாட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள பதிவில் டாட்டா குழுமம் விமானத்துறையில் ஒரு உறுதியான மார்க்கெட்டை நிலைநாட்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜே.ஆர்.டி டாட்டா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏர் இந்தியா உலகின் மிகவும் மதிக்கத்தக்க விமான நிறுவனமாக இருந்ததை நினைவு கூறியுள்ளார் ரத்தன் டாட்டா.

ஜே.ஆர்.டி டாட்டாவால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாட்டா குழுமம் பெற்றுள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் குறிப்பிட்ட இவர் “Welcome Back Air India” என கடிதத்தின் இறுதியில் குறிப்பிட்டு தனது கையெழுத்தை போட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஏர் இந்தியா நிறுவப்பட்ட போது அதன் பணியாளர்களுடன் ஜே.ஆர்.டி டாட்டா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இப்பதிவில் பகிர்ந்துள்ளார்.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
ரத்தன் டாடாவின் இப்பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாட்டா வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.