IPL 2021-ல் வெற்றிவாகை சூடப்போகும் அணி எது ???

நடந்து வரும் IPL போட்டிகளின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவின்படி டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் Playoff சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பைக்கான இறுதிக்கட்ட போட்டிகளில் பங்கேற்கும்.

கடைசியாக நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணியை 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை ஈட்டினால் மும்பை playoff சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட சாதனையை மும்பையால் நிகழ்த்த முடியவில்லை. ஆதலால் நடப்புச் சாம்பியனான மும்பை ஐந்தாவது இடத்தில் இந்த ஐ.பி.எல்-ஐ முடித்துக் கொண்டது.
புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள டெல்லி மற்றும் சென்னை அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான Qualifier 1 போட்டியில் இன்று இரவு பலப்பரீட்சை செய்யவுள்ளது. இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் லீக் சுற்றில் இந்த இரு அணிகளும் மோதிக் கொண்ட இரண்டு ஆட்டங்களிலுமே டெல்லி அணி சென்னை அணியை சுலபமாக வீழ்த்தியுள்ளது. எனவே ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி டெல்லி அணி களம் இறங்கும்.
புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்துள்ள பெங்களூரு கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் எலிமினேட்டர் போட்டியில் வரும் திங்கட்கிழமை பலப்பரிட்சை செய்ய உள்ளது. இந்த இரு அணிகளுமே தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றியை வைத்துள்ளதால் இப்போட்டியின் மீதும் கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெல்பவர்கள் Qualifier ஒன்று போட்டியில் தோற்ற அணியிடம் Qualifier 2 போட்டியில் மோதுவர். Qualifier 2 வில் வெற்றி பெறுபவர்களுக்கும் Qualifier ஒன்றில் வெற்றி பெரும் அணிக்கும் இடையே இறுதிப்போட்டி வருகிற அக்டோபர் 15ஆம் தேதி நடக்க உள்ளது.
கொரோனா காரணத்தினால் இரண்டு பாகங்களாக நடத்தப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் இந்த இக்கட்டான சூழலில் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் விதத்தில் அமைந்தது. வெற்றி வாகை சூடப் போகும் அணி எது என்பதை தெரிந்துகொள்வதற்கு மேலும் ஒரு வாரம் ரசிகர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
Play off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளுக்கும் தீப் டாக்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.