• September 8, 2024

தோனி சம்பளம் வாங்க போவதில்லை !!!

 தோனி சம்பளம் வாங்க போவதில்லை !!!

நடந்து வரும் ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ளது. இந்த உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பு கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வந்தபோதே தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். தற்போது இந்த உலகக் கோப்பைக்கு ஆலோசகராக இருப்பதற்காக எந்தவிதமான சம்பளத்தையும் தோனி வாங்கப் போவதில்லை என தெரியவந்துள்ளது.

DC vs CSK: MS Dhoni's Match-Winning Knock That Broke The Internet. Watch |  Cricket News

தோனி பணம் ஏதும் வாங்காமல் இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படவுள்ளார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மீது உள்ள அக்கறையால் தோனி இதை செய்யவுள்ளார் என ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

டி20 உலகக் கோப்பை தொடங்கியபோதே முதன் முதலில் இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தது கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு இருக்கும் அனுபவத்தையும் திறமையையும் இந்திய அணிக்கு தோனி வாரி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahendra Singh Dhoni's savage reply to a Twitter user goes VIRAL - Details  here

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தொடங்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு வீரர்கள் தங்களை உற்சாகத்துடன் தயார்படுத்தி வருகின்றனர். 2007-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை இதுவரை வெல்லாத நிலையில் தற்போது மீண்டும் அந்த உலகக் கோப்பையை வெல்ல முனைப்புடன் வீரர்கள் களமிறங்குவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு தோனி போன்ற அனுபவம் மிக்க வீரர் ஆலோசகராக இருப்பது மேலும் பலம் சேர்க்கும்.

தல தோனி அவர்களுக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் deep talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.