• October 7, 2024

நிஜ வாழ்க்கையில் ஒரு ஆட்டோக்கார மாணிக் பாட்ஷா !!!

 நிஜ வாழ்க்கையில் ஒரு ஆட்டோக்கார மாணிக் பாட்ஷா !!!

ஒரு மைல்கல்லை அடைவதற்கு கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. அப்படிப்பட்ட கடினமான முயற்சியால் ஒரு புதுவிதமான கின்னஸ் சாதனையை சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் எனும் Auto ஓட்டுனர் 2016-ஆம் ஆண்டு செய்துள்ளார்.

பொதுவாக ஆட்டோக்கள் மூன்று சக்கரங்கள் இருந்தால் தான் இயங்கும். அப்படிப்பட்ட ஆட்டோவை வெறும் இரண்டே சக்கரங்களில் இயக்கி ஜெகதீஷ் உலக சாதனையை புரிந்துள்ளார். இதற்கு கடும் பயிற்சியை இவர் மேற்கொண்டிருக்க கூடும்.

Certified Rajini fan! Man rides autorickshaw on two wheels, sets world record - video goes viral

இந்த சாதனை நிகழ்ந்து 5 ஆண்டுகள் கழித்து கின்னஸ் வேர்ல்டு records-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெகதீஷ் இரண்டு சக்கரங்களில் ஆட்டோ ஓட்டும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஜெகதீஷ் தனது தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் இரண்டே சக்கரங்களைக் கொண்டு ஆட்டோவை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

ஜெகதீசின் இந்த சாதனைக்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இரண்டு சக்கரங்களில் ஆட்டோவை இயக்க இவருக்கு நிச்சயம் கடுமையான பயிற்சி தேவைப்பட்டிருக்கும்.

இவர் ஒரு ரஜினி ரசிகராக இருக்கக் கூடுமென இந்த வீடியோவை பார்த்த சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜெகதீஷ் ஆட்டோவை இரண்டு சக்கரங்களில் இயக்கும் வீடியோ அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.