• July 27, 2024

ஹோப்பி (HOPI) இந்தியர்கள் பற்றிய ரகசியங்கள்..! – அவிழ்க்கப்படாத மர்மங்கள்..

 ஹோப்பி (HOPI) இந்தியர்கள் பற்றிய ரகசியங்கள்..! – அவிழ்க்கப்படாத மர்மங்கள்..

hopi

ஹோப்பி இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு அரிசோனா பகுதியில் வசித்து வரும் பூர்வ அமெரிக்க குடிகள். இந்த இன மக்கள் பற்றிய கணக்கெடுப்பில் 2010 ஆம் ஆண்டு இவர்களின் மக்கள் தொகை 19,338 அளவே இருந்துள்ளது.

பூமிக்கு அடியில் முதலில் தோன்றிய மனிதர்களாக தங்களை கூறிக் கொள்ளும் இவர்கள் இந்திய மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டவர்கள் என்றால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.

hopi
hopi

இவர்கள் சிறந்த நெசவாளர்களாகவும், கைவினை கலைஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்தியர்களைப் போலவே பருத்தியை பயிர் செய்யக்கூடிய நுட்பத்தை அறிந்த இவர்கள் தெற்கு, வடக்கு மெக்சிகோ வரை தங்களது ஆதிக்கத்தை செலுத்தியவர்கள்.

மண்பாண்டம் செய்வதில் வல்லவராக இருந்த இவர்கள் எம்பிராய்டரி போடுவதிலும் சிறப்பான நிலையை எட்டி இருந்தார்கள். மேலும் துணிகளுக்கு சாயம் விடும் முறையை கற்று அறிந்தவர்கள்.

இவர்களது வழிபாட்டு முறை, மத மற்றும் புராண பாரம்பரிய தன்மையோடு திகழ்கிறது. இதுவும் நமது கலாச்சாரத்தோடு சற்று தொடர்புடையதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

hopi
hopi

இதற்கு காரணம் இவர்களிடையே இருக்கக்கூடிய சூரிய வழிபாடு முறைதான். இந்த சூரியனை இவர்கள் தவா (TAWA) என்ற பெயரில் அழைக்கிறார்கள். மேலும் இந்த உலகம் உருவாக தவா முக்கிய காரணம் என்று இதில் தோக்பெல்லா இந்த உலகம் உருவாக காரணமானவர் என்ற நம்பிக்கை உள்ளது.

இவர்கள் பூமியை தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும், சூரிய, சந்திரர்களை வணங்கி இருக்கிறார்கள். இதை எல்லாம் ஒப்பிட்டு நோக்கும் போது, இது நமது பாரம்பரியத்தில் இருந்து தான் அவர்களுக்கு சென்றிருக்கும் என்ற கூற்றை பலரும் முன் வைக்கிறார்கள்.

இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள் அரசியல் மட்டுமல்லாமல் விவசாயம் போர் போன்றவற்றில் கை தேர்ந்தவர்களாக விளங்குகிறார்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் போர் வீரர்கள் மிகவும் திறமைசாலிகளாக விளங்குவதோடு பாரம்பரியமான மருத்துவ முறையை பயன்படுத்துகிறார்கள்.

ஹோப்பி மக்களின் உண்மையான பெயர் ஹோபிடு ஷி-னு-மு இதனுடைய உண்மையான அர்த்தமானது அமைதியான மக்கள் என்பதை குறிக்கிறது. மிஷாவின் சட்டப்படி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களை புராணங்களின்படி எறும்பு மனிதர்கள் என்று கூட அழைக்கிறார்கள். மேலும் இவர்களின் உருவ ஒற்றுமையை பார்த்து கிரே ஏலியன்ஸ் என்றும் சிலர் இவர்களை அழைக்கிறார்கள்.

hopi
hopi

இவர்களும் உலகில் தீமைகள் அதிகரிக்கும் போது ஒரு மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டு அதன் மூலம் உலகம் அழிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையானது இந்து மதங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக கருதலாம்.

மேலும் இதுவரை மூன்று காலங்கள் முடிந்து விட்டதாகவும் தற்போது நான்காவது காலத்தில் இருப்பதாகவும் இந்த காலத்தில் அமைதி எப்போது சீர்குலைகிறதோ அந்த சமயத்தில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு, கடவுள் அழிவை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.

இதுவும் இந்து மதத்தில் கூறப்பட்டிருக்கும் நான்கு வித யுகங்களை குறிப்பது போலவே உள்ளது. இதன் மூலம் இந்து புராணங்களுக்கும் இவர்களது சிந்தனைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை நாம் மிக நன்றாக அறிந்து கொள்ளலாம்.