• July 27, 2024

 “உங்கள் கற்பனைக்கு எட்டாத  மர்மமான விஷயங்கள்”… படிக்கலாமா?

  “உங்கள் கற்பனைக்கு எட்டாத  மர்மமான விஷயங்கள்”… படிக்கலாமா?

secret places

உங்கள் மனதில் கற்பனை செய்து பார்க்க முடியாத மர்மமான பிரதேசங்கள் இந்த உலகில் பல உள்ளது. அவற்றில் ஒன்பது வகையான மர்ம பிரதேசங்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மனிதன் எவ்வளவு பெரிய சக்தியாக இன்று உருவெடுத்து இருந்தாலும் அவனால் உருவாக்கப்பட்ட அறிவியலை துணைக் கொண்டு பல வித கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தாலும் சில மர்மங்கள் அவிழ்க்க முடியாத நிலையில் உள்ளது. அவற்றுக்கு உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மர்மங்களை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

secret places
secret places

பூமியில் இருக்கும் பல்வேறு காலகட்டங்களில் திடீரென சூடு அதிகமாவதின் காரணமாக பூமி வெடித்து நெருப்பை வெளியேற்றும். கிட்டத்தட்ட இது ஒரு எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுதான். எனினும் அவை ஏன் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இவ்வாறு நடக்கிறதே என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் ஹைட்ரோ கார்பன் என்ற வேதிப்பொருள் மூலம் வேதிமாற்றம் தான் என்று சிலர் தற்போது கூறி வருகிறார்கள். மேலும் இதை திடீர் பூமி வெடிப்பு என கூறலாம்.

ஒரு காலத்தில் மிகவும் பிரம்மாண்டமான உயிரினமாக டைனோசர்கள் வாழ்ந்துள்ளது என்று அறிவியல் சொன்னாலும், இது போன்ற எந்த உயிரினங்களும் வாழவில்லை என்ற கருத்தை அதே அறிவியல் வலியுறுத்துகிறது.

secret places
secret places

அதுமட்டுமல்லாமல் இந்த உயிரினங்கள் தற்போதும் வசித்து வருவதாக பலர் கூறி இருக்கிறார்கள். எனினும் இது நிரூபிக்கப்படவில்லை. மர்மமான இந்த பேச்சு தொடர்கதையாக இன்றும் உள்ளது.

மனிதர்கள் பூமியில் வெறும் 2 லட்சம் ஆண்டுகள் தான் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் சில இடங்களில் சுமார் 100 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மர்மமான ஒன்றாக கருதப்படுகிறது.

secret places
secret places

தாவோஸ் என்ற ஊரானது நியூ மெக்சிகோ நகரின் அருகே உள்ளது. இந்தப் பகுதியில் அவ்வப்போது மர்மமான முறையில் சத்தங்கள் எழுவதாகவும் சில நேரங்களில் வாகனங்களின் எஞ்சினில் ஏற்படும் சத்தம் மற்றும் வாகன ஹாரன் சத்தம் போன்றவை ஏற்படுகிறது. இவை எங்கிருந்து வருகிறது என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.

மேலும் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற கடற்கரையில் ஒரு மனிதனின் பிணம் கிடைத்தது. அவரது பாக்கெட் ஒரே ஒரு துண்டு காகிதம் இருந்தது இதில் TAMAN SHUD என்ற வாக்கியம் எழுதப்பட்டிருந்த நிலையில் இதற்கான அர்த்தம் என்ன அந்த மனிதர் யார் எப்படி இறந்தார் என்ற எந்த தகவலும் இன்று வரை கிடைக்காதது மர்மமாகவே உள்ளது.