“உலகிலேயே ஸ்மால் சைஸ் ஆந்தை” – உண்மை என்ன?
இரவில் மட்டுமே உலா வரக்கூடிய இந்த ஆந்தையை பற்றி அதிகமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆந்தையை கடவுளின் வாகனமாக ஒரு பக்கம் வைத்திருந்தாலும் மறுபக்கம் அபசகுனத்தின் சின்னமாக இதன் சத்தத்தை கூறி இருக்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக புராண காலத்தில் துரியோதனன் பிறக்கும் போது ஆந்தைகளின் அலறல் சத்தம் அதிகளவு கேட்டதாகவும், ஆந்தையை பார்த்துச் சென்றால் காரியங்களில் தடங்கல் ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
என்னடா.. ஆந்தை பார்வை பார்க்கிறார் என்று பலரும் அந்தப் பார்வையை ஒரு திருட்டுப் பார்வையோடு ஒப்பிடுவார்கள். மேலும் இந்த ஆந்தையானது பெரும்பாலும் தனித்தே இருக்கும். இந்த ஆந்தை இனத்தை பொருத்தவரை சுமார் 133 வகைகள் காணப்படுகிறது.
இதில் உலகிலேயே மிகச்சிறிய ஆந்தையாக எல்ஃப் ஆந்தை திகழ்கிறது. இந்த ஆந்தை ஐந்து அரை அங்குலம் உயரம் கொண்டது. கண் கவரக்கூடிய வகையில் இதன் உடல் அமைப்பு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
பார்ப்பதற்கே சிட்டுக்குருவி வடிவத்தை ஒத்திருக்கும் இந்த சிறிய ஆந்தை பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் தன்மை கொண்டது.இது கூடு கட்டி வாழக்கூடிய இந்த ஆந்தை இனமானது ஆறு முதல் பத்து அடி உயரமே உள்ள மரத்தில் கூட்டினை கட்டும்.
இந்த இனத்தில் பெண் ஆந்தை ஒன்று முதல் ஐந்து முட்டைகளை அதுவும் வெள்ளை நிறத்தில் இடும். இந்த வகையான எல்ஃப் ஆந்தைகள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் தெற்கு எல்லைகளில் இருக்கும் வறண்ட முள் காடுகள் மற்றும் பாலைவனப் பகுதிகளில் காணப்படுகிறது.
இந்த ஆந்தைகள் மரம் கொத்திகள் கொத்திச் சென்றிருக்கும் மர துளைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க நிழல் பகுதியில், மலையில் நனையாத தங்கும் இடம் போன்றவற்றில் வாழக்கூடிய தன்மை கொண்டது. சில ஆந்தைகள் பாதுகாப்பைக் கருதி குழிகளில் கூடு கட்டியும் வாழும்.
மிகக் குறைந்த அளவே இருக்கக்கூடிய இந்த ஆந்தை இனம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது என்று கூறலாம்.
இரவில் மட்டுமே வேட்டையாடி சாப்பிடக்கூடிய தன்மை கொண்ட இந்த ஆந்தைகள் பற்றி வேறு ஏதேனும் விவரங்கள் உங்களுக்குத் தெரிந்தால் கட்டாயம் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.