கொள்ளி வாய் பிசாசு உண்மையா? – அறிவியல் உணர்த்தும் உண்மை என்ன?
மனிதர்களின் மனதில் பேய்கள் பற்றி விதவிதமான எண்ணங்கள் எப்போதும் இருப்பது வாடிக்கைதான். அதிலும் கிராமப்புற பகுதிகளில் கொள்ளிவாய் பிசாசு பற்றி ஒரு பெரிய புராணமே உள்ளது என்று கூறலாம்.
சிறுவயதில் கிராமத்தில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் குழந்தைகள் குறும்பு செய்யாமல் இருப்பதற்காக கொல்லிவாய் பிசாசுகள் பற்றி பல விதமான கதைகளை கூறி அவர்களிடையே பயத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்.
இந்த கதைகளை கேட்ட சிறார்களும் இரவு முழுவதும் தூங்காமல் அந்த கொள்ளிவாய் பிசாசுகள் எங்கு இருக்கும்? என்ன செய்யும் என்பது பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்கள். எனினும் அவர்களுக்கு உரிய விடை எப்போதும் கிடைத்ததில்லை என்றுதான் கூற வேண்டும்.
அந்த வகையில் கொள்ளிவாய் பிசாசு இருப்பது உண்மையா? அப்படி இருந்தால் அது எங்கு இருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
அறிவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி கொள்ளிவாய் பிசாசு என்பது ஒரு அமானுஷ்ய சக்தி அல்ல. மேலும் தீயில் எறிந்து இறந்தவர்களே கொள்ளிவாய் பிசாசுகளாக சுற்றி வருவார்கள் என்ற நம்பிக்கையை இவர்கள் தகர்த்தி எறிந்து இருக்கிறார்கள்.
பெரும்பாலான கொள்ளி வாய் பிசாசுகள் புளிய மரத்தில் அமர்ந்திருக்கும் என்று சொல்லுவார்கள். அவை நள்ளிரவு நேரங்களில் வெளியே வருவோரை தொந்தரவு செய்யும் என்ற கதைகளும் இன்றளவு பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலையில் அறிவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி காட்டுத்தீ பற்றி எரியும்போது அவை மனிதனைப் போல உருவம் கொண்டு தெரிவதால் தான் அதை கொள்ளி வாய் பிசாசு என்று கூறி இருக்கிறார்கள் எனக் கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் குப்பைகள் மற்றும் உட்கல் அடைந்த இலை தழைகள் இருக்கும் இடத்தில் மீத்தேன் எனும் வெப்ப வாயுவின் உருவாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வாயு எளிதில் தீப்பற்றி எறிய கூடியது.
மண்ணுக்கு கீழே மீத்தேன் வாயு வெளியேற்றம் காரணமாக சதுப்பு நிலங்களில் கிராமங்களில் உள்ள வயல்களில் திடீரென தீப்பிழம்பு உருவாகும். அது வெப்ப காற்றின் மீது பட்ட உடனையே எரியத் தொடங்கும். இதை தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் கொள்ளிவாய் பிசாசுகள் என்று தவறாக புரிந்து இருக்கிறார்கள்.
எனவேதான் இந்த கொள்ளிவாய் பிசாசுகள் பற்றிய அதிக அளவு செய்திகள் கிராமப்புறத்தில் காணப்படுகிறது. இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் கொள்ளிவாய் பிசாசுகள் என்பது எது என்று.
இது போன்ற சுவாரசியமான விஷயங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், உடனடியாக உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டு உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து விடுங்கள்.