• October 3, 2024

 “கடலுக்குள் மூழ்கிய அமுன் கடவுள்..!” – இன்றும் கடலுக்குள் இருக்கும் மர்ம நகரம்..

  “கடலுக்குள் மூழ்கிய அமுன் கடவுள்..!” – இன்றும் கடலுக்குள் இருக்கும் மர்ம நகரம்..

Egypt underwater city

யுகங்கள் நான்கு உள்ளது. இந்த ஒவ்வொரு யுகமும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தின் மூலம் அழிந்துள்ளது என்பது நமக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் கிமு இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆழிப்பேரலைகளால் ஒரு அற்புதமான நகரம் நீரில் மூழ்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

உதாரணமாக சிலப்பதிகாரத்தில் வரும் பூம்புகார் நகரம், மகாபாரதத்தில் வரும் துவாரகா நகரம், இவை எல்லாம் ஒரு காலகட்டத்தில் சீரும் சிறப்புமாக இருந்த போதும் அந்த நகரங்கள் அனைத்தும் கடலுக்கடியில் புதை உண்டு விட்டது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

Egypt underwater city
Egypt underwater city

அதுபோலவே எகிப்தின் மத்திய தரை கடல் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு கால்வாயில் ஆய்வுப் பணிகளை தொல்பொருள் விஞ்ஞானிகள் மேற்கொண்ட போது ஒரு அளப்பரிய கண்டுபிடிப்பை கண்டறிந்தார்கள்.

அந்த கண்டுபிடிப்பில் நீரில் மூழ்கி இருந்த கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோவில் ஆனது அமுன் மற்றும் அப்ரோடைட் கடவுளின் கோயிலாக உள்ளது என்ற கருத்தை கூறியிருக்கிறார்கள். மேலும் இந்தக் கோயில் ஒரு காலத்தில் அபூகிர் வளைகுடாவில் அமைந்திருக்கலாம்.

மேலும் இந்த இடமானது பண்டைய துறைமுக நகரான தோனிஸ் ஹெராக்லியோனின் பகுதியாக இருந்துள்ளது. எனினும் துரதிஷ்ட வசமாக கிமு இரண்டாம் நூற்றாண்டு பகுதியில் நிகழ்ந்த பேரழிவு காரணமாக கோயிலின் பட பகுதிகள் இடிந்து விழுந்ததோடு நீரில் மூழ்கியுள்ளது.

Egypt underwater city
Egypt underwater city

இந்த இடத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் துறை சார்ந்தவர்கள் கோயிலின் ஆழத்தை ஆய்வு செய்தபோது தொல்பொருட்கள் மற்றும் ரகசியங்கள் அடங்கிய ஒரு பொக்கிஷத்தை கண்டெடுத்துள்ளார்கள். இதில் வெள்ளியில் சடங்கு செய்த கருவிகள் தங்க நகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவை இருந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த மர கம்பங்கள் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கோயிலுக்கு அருகாமையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிபி 688 மற்றும் கிபி 525க்கு இடையில் ஆன கிரேக்கர்கள் பாரோக்களின் சைட் வம்சத்தின் ஆட்கள் நகரத்திற்குள் தங்கள் சொந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களுக்கு தொண்டு செய்யவும், வர்த்தகம் செய்யவும், அனுமதி பெற்று பெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

Egypt underwater city
Egypt underwater city

அது மட்டுமல்லாமல் கிரேக்கர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கிடைத்துள்ளது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் எந்த பகுதிகளில் மீண்டும் கள ஆய்வுகளை மேற்கொள்ளும் போது எண்ணற்ற புதிய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

உங்களுக்கும் இந்த மர்மமான கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்களது எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.