• July 27, 2024

 “பூமி பற்றிய ரகசியம் உடைக்கும் சிறுகோளின் மாதிரிகள்..!” – ஆட்டத்தை ஆரம்பிக்கும் நாசா..

  “பூமி பற்றிய ரகசியம் உடைக்கும் சிறுகோளின் மாதிரிகள்..!” – ஆட்டத்தை ஆரம்பிக்கும் நாசா..

OSIRIS-REx

நமது பூமி பற்றிய ரகசியங்களை மேலும் அறிந்து கொள்ள நாசா பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வேளையில் விண்கலத்தில் இருந்து சிறுகோள் மாதிரிகள் சுமார் 63,000 மைல்களைக் கடந்து எந்த விதமான சேதமும் அடையாமல் தற்போது பூமிக்கு கேப்சூல் வடிவத்தில் வந்து சேர்ந்துள்ளது.

இந்த கேப்சூலுக்குள் இருக்கும் மாதிரிகள் அனைத்தும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த சிறு கோளின் மாதிரிகள் என கூறலாம். இந்த மாதிரிகள் அனைத்தும் விண்வெளியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உட்டா பாலைவனத்தில் விழுந்தது.

OSIRIS-REx
OSIRIS-REx

மேலும் சிறுகோளை பூமிக்கு அனுப்பும் பயணத்தில் ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலமானது சுமார் 63,000 மைல்கள் தொலைவில் இருந்து இந்த மாதிரி கேப்சூலை அனுப்பி உள்ளது. இந்த கேப்சூல் 4 மணி நேரம் கழித்து ராணுவ நிலத்தின் தொலைதூரப் பரப்பில் தரை இறங்கியது.

இந்த கேப்சூல் ஆனது ஆரஞ்சு நிற கோடுகள் கொண்ட பாராசூட்டின் மூலம் நினைத்துப் பார்த்ததை விட அதிக அளவு அதிகமாக திறக்கப்பட்டது. சுமார் 20000 அடியில் இது வீழ்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

OSIRIS-REx
OSIRIS-REx

அது மட்டுமல்லாமல் எந்த கேப்சூல் எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் அதில் இருந்த 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மாதிரிகள் மாசுபடாமல் இருந்தது. டச் டவுன் செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் ஹெலிகாப்டரின் மூலம் கேப்சூல் பாதுகாப்புத் துறையின் சோதனை மற்றும் பயிற்சி ரேஞ்சில் உள்ள ஒரு தற்காலிக அறைக்கு மாற்றப்பட்டது.

ஆய்வு செய்யப்படக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய இந்த கேப்சூலை ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். அங்கிருக்கும் ஆய்வகத்தில் இவை திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். ஏற்கனவே அப்பல்லோ விண்வெளி வீரர்களால் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நிலவு பாறைகள் அங்கு உள்ளது.

OSIRIS-REx
OSIRIS-REx

இந்த மாதிரிகளை ஆய்வு செய்வதின் மூலம் பூமி பற்றிய புதிய விஷயங்கள் வெளிவருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதால் ஆராய்ச்சியாளர்கள் இந்த மாதிரி களை ஆய்வு செய்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

எனவே இந்த ஆய்வின் முடிவில் கட்டாயம் பூமி பற்றிய பல விஷயங்கள் நமக்கு தெரிய வரும். இதன் மூலம் நமது பூமி மட்டுமல்ல சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்பதை நாம் அறிந்து கொள்ள இந்த பென்னு சிறுகோள் மாதிரிகள் உதவி செய்யும்.

OSIRIS-REx
OSIRIS-REx

ஏற்கனவே இது போன்ற சிறு கோள்களின் மாதிரிகளை கொண்டு வந்த ஒரே நாடு என்ற இடத்தில் ஜப்பான் இருந்தது. இதனை அடுத்து தற்போது அமெரிக்க விண்கலம் அதிகப்படியான மாதிரிகளை சேகரித்து வந்துள்ளது.

இதனை அடுத்து பூமியின் வயதை விட அதிக வயது கொண்ட பென்னுவின் மாதிரிகள் மூலம் பூமி பற்றிய மர்மமான வினாக்களுக்கு கட்டாயம் விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.