• July 27, 2024

அட.. மன அழுத்தத்தை போக்க செடிகள் இருக்கா? – இனி நோ சொல்லுங்க மன அழுத்தத்திற்கு..

 அட.. மன அழுத்தத்தை போக்க செடிகள் இருக்கா? – இனி நோ சொல்லுங்க மன அழுத்தத்திற்கு..

stress relief plant

பொதுவாகவே வாஸ்து சாஸ்திரம் பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை இந்த சாஸ்திரப்படி சில செடிகள் நேர்மறை ஆற்றலை அள்ளித் தருவதோடு குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தி பண வரவை அதிகப்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?.

அட ..நேர்மறை ஆற்றல் பணவரவு குடும்ப சுபிட்சம் மற்றும் இல்லாமல் உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க கூடிய அளப்பரிய பணியை இந்த செடிகள் செய்கிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படும்.

stress relief plant
stress relief plant

பொதுவாகவே எல்லாவிதமான செடிகளும் காற்றில் கலந்திருக்கும் நச்சுக்களை அகற்றி வீட்டின் உட்புறத்தில் தூய காற்றை தரக்கூடிய ஆற்றல் படைத்தது.

உங்களது மன அழுத்தத்தை போக்க கூடிய இந்த செடிகளை நீங்கள் எளிதில் உங்கள் வீடுகளில் வைத்து பராமரிக்க முடியும்.

இதற்காக நீங்கள் வாங்க வேண்டிய முக்கிய செடிகள் மூன்றும் டென்ரோபியம் தாவர வகையை சார்ந்தது. மேலும் சில ஆர்கிட் வகையைச் சார்ந்தது. அடுத்ததாக பீச் லில்லி செடிகளை கூறலாம்.

stress relief plant
stress relief plant

இந்த மூன்று வகையான செடிகளும் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் காலையில் எழுந்து இதை பார்க்கும் போது உங்களுக்கு புத்துணர்வு ஏற்படும். அது மட்டுமல்லாமல் இந்த செடி சிறிது சிறிதாக வளரும் பட்சத்தில் அதன் முன்னேற்றத்தை பார்க்கும் போது உங்களுக்கும் இந்த செடியை போல முன்னேற வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும்.

மேலும் உங்கள் மனதை பக்குவமாக மாற்றி நேர்மறை ஆற்றல்களை அதிகரித்து உங்கள் எண்ணங்களை விஸ்தரிக்க கூடிய வகையில் இந்த செடிகள் உங்களை மாற்றி விடும்.

stress relief plant
stress relief plant

மிகக் குறைந்த அளவு பராமரிப்பு செய்தால் போதும். இந்த செடிகள் மிக நேர்த்தியான முறையில் வளரக்கூடிய தன்மை கொண்டதால் நீங்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள உங்கள் வீடுகளில் இந்த செடிகளை எளிதில் வளர்க்கலாம்.

எனவே மேற்கூறிய இந்த செடிகளை உங்கள் வீடுகளில் வாங்கி வளர்த்துவதின் மூலம் உங்களுக்கு ஏற்படும், அதிகப்படியான மன அழுத்தம் கட்டாயம் குறையும். மருந்துகளின் பயன்பாட்டை தவிர்த்து இது மூலம் நீங்கள் அதிகப்பயனை அடைய முடியும்.