பலராமரின் கரு தாயின் கர்ப்பப்பையில் இருந்து வேறொரு பெண்ணுக்கு மாற்றப்பட்டதா? பாகவதம் தரும் திரில்லிங் ரிப்போர்ட்..
இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது பல அற்புதமான விஷயங்கள் வெளிவருவதோடு, நமது முன்னோர்களுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்திலேயே இத்தகைய அறிவியல் சாதனைகளை எப்படி செய்தார்கள் என்று நம்மை வியக்க வைக்கிறது.
அந்த வரிசையில் இன்று பலராமன் உடைய கருவானது தன் தாய் வயிற்றிலிருந்து வேறொரு பெண்ணின் வயிற்றுக்கு மாற்றப்பட்ட விஷயத்தை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். பலராமன் பகவான் கிருஷ்ணரின் அண்ணன் என்று. கோகுலத்தில் கிருஷ்ணன் வளர்ந்த போது அவனோடு துணையாக தோள் கொடுத்த பலராமன், கிருஷ்ணனுக்கு உதவியாக பல போர்களில் களம் இறங்கி இருக்கிறார்.
புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் பலராமனை முதல் விவசாயி என்று கூட நாம் சொல்லலாம். இதற்கு காரணம் இவர் விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய ஏரை தனது ஆயுதமாக கொண்டிருக்கிறார். எப்போதுமே ஒரு நாடு செழிப்பாக இருக்க வேண்டும் என்றால், ஏர்முனையும் போர்முனையும் சிறப்பாக அமைய வேண்டும் என்று கூறுவார்கள். அந்த வகையில் உலகில் முதல் விவசாயியாகவும், அந்த விவசாயத்துக்கு பயன்படக்கூடிய ஏரை ஆயுதமாக பயன்படுத்தியவர் தான் பலராமன்.
மேலும் இந்து புராணத்தின்படி இந்த பலராமன் தன் முற்பிறவியில் ஷேஷா என்ற சர்ப்ப ராஜாவாக பிறந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் விஷ்ணு பாற்கடலில் ஓய்வெடுக்க மென்மையான வசதியான படுக்கையாக மாறியவர் ஷேஷா என்ற இவர் தான்.
சர்ப்ப ராஜாவான இவரின் சேவையில் மகிழ்ந்த விஷ்ணு தான் எடுக்க இருக்கும் அடுத்த அவதாரத்தில் தனது சகோதரராக பிறக்க கூடிய வாய்ப்பை அளித்ததை அடுத்து, கோகுலத்தில் வாழ்ந்து வந்த வசுதேவருக்கும், ரோகினிக்கும் மகனாகப் பிறந்தார் என்ற கதை நமக்கு மிகவும் நன்றாக தெரியும்.
இந்த பலராம் ஆன்மீகத்தில் மட்டுமல்லாமல் உடல் வலிமையை அதிகளவு பெற்றவர். கோகுலத்தில் கண்ணனுக்கு துணையாக பேய்களை கொல்வது, கோகுல மக்களை காப்பது போன்ற பல பணிகளை செய்து இருக்கிறார். மிகச் சிறந்த போர் வீரரான இவர் குருசேத்திரப் போரில் கண்ணனுக்கு உதவி புரிந்திருக்கிறார்.
இந்துக்களின் கடவுளாக கருதப்படக் கூடிய பலராமன், விஷ்ணுவின் அவதாரமாக கருதி வணங்கப்படக்கூடிய நிலையை அடைந்தவர். பலராமனின் பிறப்பில் தான் அந்த ரகசியம் புதைந்துள்ளது. இதுவரை நீங்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்களா? என்பது சந்தேகம் தான்.
இந்த உண்மையை மிக நேர்த்தியான முறையில் பாகவதம் விளக்கி உள்ளது. இதை படிக்கும் போதே நமது முன்னோர்களின் சீரிய அறிவை எண்ணி நமக்குள் வியப்பு ஏற்படுகிறது.
மருத்துவ அறிவியல் வளர்ச்சி அடையாத அந்த காலகட்டத்தில் பலராமனின் பிறப்பானது ஒரு குழந்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நடந்தது என்றால் எப்படி உங்களுக்கு இருக்கும். இது எல்லாம் உண்மையில் சாத்தியமா? என்று பல வகைகளில் உங்களுக்குள் கேள்விகள் எழும்.
எனினும் பாகவதம் இந்த கரு மாற்று அறுவை சிகிச்சையை பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளது. உலகிலேயே இது தான் முதல் கர்ப்பப்பை சார்ந்த அறுவை சிகிச்சையாக இருந்திருக்கும் என்று நாம் ஆணித்தரமாக அடித்து கூறக்கூடிய வகையில் தான் நிகழ்வு உள்ளது.
பாகவதத்தை மேலும் ஆய்வு செய்து பார்க்கும் போது அதனுடைய உள் அர்த்தம் மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுகிறது. விஷ்ணு பகவான் திரேத யுகத்தில் அவதாரம் எடுக்க விரும்பிய போது அவர் தலையில் இருந்து ஒரு வெள்ளை முடியை பறித்தார்.
பகவான் விஷ்ணுவின் தெய்வீக ஆற்றலின் மூலம் இந்த வெள்ளை முடி தேவகியின் கருப்பையில் சென்று கருவுற்றது. ஏற்கனவே நமக்கு தெரிந்த கதை என்னவென்றால் தேவகியின் வயிற்றில் பிறக்கக்கூடிய குழந்தை அவன் தாய் மாமனான கம்சனை அழித்துவிடுவான் என்ற கதை தான்.
இதனை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து கொண்ட பகவான் விஷ்ணு தேவகியின் வயிற்றில் உருவாகி இருந்த கருவை தேவி மகா மாயாவின் துணையோடு ரோகினியின் கர்ப்பப்பைக்கு மாற்ற கூறுகிறார். இதனை அடுத்து தேவகியின் வயிற்றில் இருந்த கருவானது நேர்த்தியான முறையில் ரோகினியின் வயிற்றில் இருந்த கர்ப்பப்பைக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து பலராமன் ரோகினியின் வயிற்றில் பிறக்கிறார் என்பதை தெளிவாக பாகவதத்தில் கூறியிருக்கிறார்கள்.
இப்போது போது சொல்லுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலை எப்படிப்பட்டது. தேவி மகா மாயை தான் சிறப்பான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கருவினை மாற்றிய பணியை செய்திருக்கிறாள்.
மேலும் பலராமன் கம்சனின் மல்யுத்த வீரர்களான தேனுகா,பிரலம்பா மற்றும் முஷ்டிக போன்ற வலிமைமிக்க வீரர்களை கொன்று இருக்கிறார்.மல்யுத்த போட்டியில் பீமனை தோற்கடித்து பீமருக்கு குருவாக திகழ்ந்தவர் தான் பலராமர். மேலும் மல்யுத்தத்தில் இருக்கக்கூடிய பல சூட்சுமங்களை பீமனுக்கு இவர் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
பாகவதத்தில் கூறப்பட்டிருக்கக் கூடிய உண்மையை நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டம் ஒன்றாவது மற்றும் இரண்டாவது அத்தியாயங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம். இதில் பலராமன் மர்மமான வடிவில் தோன்றிய கதையை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்.
இப்போது உங்களுக்கு பலராமனின் பிறப்பு எத்தகையது என்ற உண்மை கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். இது கதை அல்ல இப்படி நடந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் அதிக அளவு உள்ளது என்பதால் ,நமது முன்னோர்களின் அறிவியல் அறிவை வியப்பதோடு நின்று விடாமல் பாகவதம் முழுவதையும் படித்து பயனடையுங்கள். உங்களது கருத்துக்களையும் எங்களோடு பகிருங்கள்.