• July 27, 2024

“அகத்தை படம் பிடித்து காட்டும் அகநானூறு..!” – காதல் ரசம் சொட்டும் வரிகள்..

 “அகத்தை படம் பிடித்து காட்டும் அகநானூறு..!” – காதல் ரசம் சொட்டும் வரிகள்..

சங்க கால நூல்களின் தொகுப்பில் இருக்கும், எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக கருதப்படும் அகநானூறினை சுமார் 144 புலவர்கள் எழுதி இருக்கிறார்கள். இந்த நூலைத் தொகுத்து வழங்கியவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனான உருத்திரசன்மர். இந்த முழு நூலையும் தொகுப்பித்த மன்னர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.

 

சுமார் 400 பாடல்கள் கொண்ட இந்த நூலானது அகத்திணையை சார்ந்தது. அகம்+நான்கு+நூறு என்பதுதான் அகநானூறு என்றானது. இந்த அகநானூறை அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, நெடுந்தொகை நானூறு, நெடும் பாட்டு,  பெருந்தொகை நானூறு என்ற வேறு சில பெயர்களாலும் அழைப்பார்கள்.

 

அகநானூறில் மன்னன் அதியமான், எழினி, சோழன் கரிகாலன், பாண்டியன் நெடுஞ்செழியன், உதயஞ்சேயலாதன், ஆதிமந்தி போன்ற அரசர்களை குறிப்பிடுகிறது.

அகநானூறானது மூன்று பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே களித்து யானை நிரை, மணிமிடை பவளம், நித்தில கோவை என்பதாகும்.

 

இந்த நூலில் அதிக அளவு வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சோழர்களின் குடவோலை தேர்தல் முறை பற்றி இது கூறுகிறது.

 

அது மட்டுமல்லாது தமிழர்களின் திருமண விழாக்கள், அவை நடைபெறுகின்ற விதம் போன்றவை மிக அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் கிமு 310 ல் நிகழ்ந்த சந்திரகுப்த மௌரியரின் மாமனார் பிந்துசாரரின் தென்னகப் படைகளுக்கு வடுகர் இனம் உதவி செய்வதை 273 ஆம் பாடலில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்லாமல், இதிகாச புராண செய்திகளும் அகநானூறு கூறப்பட்டுள்ளது. அதில் ராமன் கோடிய கரையில் இருந்த செய்தியும், கண்ணன் கோபியரின் ஆடைகளை திருடிய செய்தியும், திருமால், முருகன், கண்ணன், பலராமன் போன்றவர்களின் சீரிய செயல்கள் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறது.

 

மேலும் அகநானூறு தமிழ் மங்கையரின் காதலை படம்பிடித்து காட்டும் வண்ணம் உள்ளது. இதில் வரும் பாடல் வரிகளான

 

சிலம்பில் போக்கிய செம்முக வாழை

அலங்கல் அப்லோடு அசைவமா உறுதியும்

பள்ளியாகும் ப்ரூஉப் புறம் கை வரும் 

நல்வரை நாடனோடு அருவி ஆடியும்

பல் இதழ் நீலம் படு சுனைக்

குற்றறும் நறவீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் 

வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்

அரிய போலும் காதல் அம் தோழி

 

இந்தப் பாடல் வரிகளில் மலையில் செழித்து வளர்ந்து நிற்கக்கூடிய செவ்வாழை இலைகள், அனைத்தும் வீசுகின்ற காற்றில் அசைந்து ஆடும் போது அங்கு படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் யானை என் பருத்த உடலை அது தழுவும்.

இத்தகைய வளம் மிக்க மலை நாட்டைச் சேர்ந்த எனது காதலுடன் அருவியில் நீராட முடியாத என்ற ஏக்கத்தில் தலைவி இருக்கிறாள். ‌

 

அருகில் இருக்கக்கூடிய சுனையில் நீல நிற பூக்களை பறித்து மகிழ முடியாதோ, வாசனை மிகுந்த மலர்களைக் கொண்ட வேங்கை மரத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டிருக்கும் சோலையில் தனது காதலனோடு கலந்து விளையாட முடியாதோ, என தனது எக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள்.

 

இத்தகைய காதல் ரசம் சொட்ட கூடிய பல பாடல்களைக் கொண்ட அகநானூறு  காதல் பற்றியும், அகவாழ்வு சார்ந்த கருத்துக்களையும் அழகாக எடுத்து உரைப்பதால் தான் இன்று வரை இந்த பாடல் வரிகள் நிலைத்து உள்ளது என கூறலாம்.