• December 4, 2024

“இந்தியாவில் மர்மமாக இருக்கும் விஷயங்கள்..!” – ஆத்தாடி இவ்வளவு இருக்கா..

 “இந்தியாவில் மர்மமாக இருக்கும் விஷயங்கள்..!” – ஆத்தாடி இவ்வளவு இருக்கா..

secret

இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த நாடாகும். இங்கு உலகில் உள்ள மற்ற நாடுகளை போல இல்லாமல் பல மர்மங்கள் நிறைந்த நாடாக விளங்குகிறது.

 

அப்படி என்னென்ன மர்மங்கள் இங்கு உள்ளது என்பது பற்றிய சில தகவல்களை விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

secret
secret

இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள லடாக் இமயமலையின் அருகில் உள்ளது. இந்த மலையில் காந்த சக்தி உள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு உதாரணமாக இங்கு எந்த காரை பார்க்கிங் செய்து நியூட்ரல் போட்டு விட்டால் தானாகவே மேல் நோக்கி கார் நகரும் .அதுவும் 20 கிலோ மீட்டர் வேகம் வரை செல்வதாக பலரும் கருத்துக்கள் கூறியிருக்கிறார்கள்.

 

உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் காதலின் சின்னமாக போற்றப்படுவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.ஆனால் எந்த தாஜ்மஹாலுக்கு அடியில் மர்மமாக ஒரு கோயில் உள்ளது. கோயிலாக இருந்த இடத்தை தான் ஷாஜகான் பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

 

2012 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் திடீர் என்று வெடி சத்தம் கேட்டுள்ளது. இந்த வெடி சத்தமானது ஒரு அணுகுண்டு வெடித்தால் எப்படி இருக்குமோ அதுபோல மிகப் பிரமாண்டமான சத்தமாகவும், சற்று ஒலியோடும் இருந்துள்ளது. இதை அடுத்து அங்கு விமானங்கள் பறந்ததால் ஏற்பட்டிருக்க கூடிய காற்று அழுத்த மாற்றமாக இருக்கலாம் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் அப்படிப்பட்ட விமானம் ஏறும் அந்த பகுதியில் பறக்கவில்லை எனவே இன்று வரை ஆண்ட மர்மமான சத்தம் எப்படி ஏற்பட்டது என்பது பலரும் அறியாத மர்மமாகவே உள்ளது.

secret
secret

மேலும் இந்தியாவில் ஒரு கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இரட்டைக் குழந்தைகளாக உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஒரு கிராமம் கேரளாவில் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் கோடினி என்பதாகும். இங்கு சுமார் 250 க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஏன் இரட்டையர்களாக பிறக்கிறார்கள் என்பதை இன்றுவரை விளங்காத புதிராகவே உள்ளது.

secret
secret

மேலும் இது போன்ற மர்மங்களை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் எங்கள் இணையதள பக்கத்தை பார்வையிடுவதோடு மட்டுமல்லாமல் அதனை படித்து உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.