“கிருஷ்ணரின் துவாரகை கடலுக்கடியில் உள்ளதா?”- உண்மையில் அகழ்வாராய்ச்சியில் என்ன கிடைத்தது?
இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கிருஷ்ண பெருமானின் பிறப்பு, வளர்ப்பு, காஞ்சவதா, மதுராவுக்கு திரும்புதல், தப்பித்தல், துவாரகையை நிறுவுதல், வீரம் மற்றும் யாதவர்களின் வீழ்ச்சியை பற்றி மிகவும் விவரமாக எடுத்துக் கூறுகிறது.
இந்த புராணத்தை தவிர மகாபாரதம் மற்றும் விஷ்ணு புராணத்தில் பகவான் கண்ணனை பற்றிய குறிப்புகளை அதிகளவு தந்துள்ளது. மேலும் கண்ணன் ஹம்சனை அளித்த பிறகு மகதத்தை ஆட்சி செய்து வந்த ஐரா சங்கனுக்கு கோபம் ஏற்பட்டது. இந்த ஐரா சங்கன் கம்சனின் இரண்டு மகளாகிய அஸ்தி மற்றும் பிரஸ்தியின் கணவர் ஆவார்.
எனவே கோபம் கொண்ட ஐரா சங்கன் 17 முறை மதுரா மீது படையெடுத்தார். எனினும் ஒவ்வொரு முறையும் ஐரா சங்கன் தோல்வியை சந்திக்க கிருஷ்ணரும், பலராமனும் வெற்றியை அடைந்து அந்த நகரத்தை பாதுகாத்தனர்.
இதனை அடுத்து பதினெட்டாவது முறை ஐரா சங்கர் மதுராவின் மீது படையெடுத்த போது மதுராவின் வீழ்ச்சி உறுதியானதால் அங்கிருந்த நகர மக்களை துவாரகைக்கு வலுக்கட்டாயமாக கண்ணன் அழைத்துச் சென்று குடியமர்த்தினார்.
இந்த துவாரகையை கட்டுவதற்காக கண்ணன் கடலில் இருந்து 12 யோஜனைகள் நிலத்தை வாங்கியதாக உள்ளூர் வாசிகள் கூறி வருகிறார்கள். அத்தோடு தேவர்களின் ஸ்தபதி மனத விஷ்வகர்மாவால் துவாரகை நிர்மாணிக்கப்பட்டது.
அத்தகைய சிறப்புமிக்க துவாரகை கடலுக்குள் மூழ்கி விட்டதா? அப்படி மூழ்கி இருந்தால் அது பற்றிய விவரங்களை தொல் இயல் துறை கண்டெடுத்து உள்ளதா? இதனைப் பற்றி விரிவாக இனி காணலாம்.
ஏ எஸ் ஐ எனும் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் கே கே முகமது மகாபாரதத்தின் காலம் கி.மு ஆயிரத்து நானூறிலிருந்து 1500 வரை இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயே தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தொல்லியல் ஆய்வில் அகழ்வாராய்ச்சிகளும் அடங்கும்.
இந்து மக்களின் மகாபாரத கதை நடந்த ஆண்டு பற்றிய நம்பிக்கைக்கு சற்று சந்தேகத்தை தரக்கூடிய வகையில், தொல்பொருள் ஆய்வாளர்கள் தந்திருக்கும் கால மதிப்பீடானது சுமார் 1500 ஆண்டுகள் இடைவெளியை கொண்டுள்ளது.
மேலும் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர்களுக்கு 1960 களின் முற்பகுதியில் துவாரகையில் உள்ள ஜெகத் கோயிலுக்கு அருகே ஒரு வீட்டை இடிக்கும் போது கோயிலின் மேற்பகுதி கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியில் அகழ்வாய்வு மேற்கொண்ட போது அது ஒன்பதாம் நூற்றாண்டு விஷ்ணு கோயில் எச்சங்கள் என்பது புலனானது.
மேலும் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல பொருட்கள் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து துவாரகை ஒரு முறை அல்ல, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் துவாரகை ஆறு முறை மூழ்கி இருப்பதாகவும், தற்போது இருக்கும் துவாரகை ஏழாவது துவாரகையாக உள்ளது என்று மக்கள் நம்புகிறார்கள்.
கர்நாடகாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் சிக்காரி புரா ரங்கநாத்ரா குஜராத்தை தனது சொந்த ஊராக கொண்டதால் அங்கிருக்கும் கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்தார். நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஓசியா கிராபியில் நீருக்கடிகள் சென்று தொல் இயல் ஆய்வை மேற்கொள்வதில் இவர் முன்னோடி.
அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் இவர் ஆய்வு செய்தபோது மண்ணுக் அடியில் செவ்வக கற்களை கண்டுபிடித்தார். இது ஒரு கட்டிடத்தின் பகுதியாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். அதுமட்டுமல்லாமல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அரை வட்ட கற்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கல்லால் செய்யப்பட்ட நங்கூரங்கள் இருந்தது. இதில் உளி கொண்டு துளைகள் செதுக்கப்பட்டு இருந்தது. ஏறக்குறைய ஒரே வடிவில் இருக்கும் சுண்ணாம்பு கல்லாக அவை செய்யப்பட்டு இருந்தது.
இது இந்தப் பகுதியைச் சுற்றி ஏராளமாக காணப்படுகிறது. இவை தவிர மண்பாண்டங்கள், ஆபரணங்கள், முத்திரைகள் என பல வகையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு கண்டுபிடிக்கப் பட்ட பொருட்களில் சில வகை நாணயங்கள் ஒமன் எமரைட் மற்றும் மெசபடோமிய நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு கடலில் ஹைட்ரோகிராபி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 200 சதுர மீட்டர் பரப்பளவு வரை இந்த ஆய்வில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 1977 ஆம் ஆண்டு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் சில கப்பல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற நம்பிக்கை உள்ளது.
துவாரகை முழுவதுமே இது போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல வண்ணம் பூசப்பட்ட பொருட்களும் உள்ளது. பல வண்ணங்களை பயன்படுத்த பாலிரும் பொருட்களை கண்டுபிடித்துள்ளார்கள். சிவப்பு மேற்பரப்பில் கருப்புச் சாயத்துடன் கூடிய பைக்ரோம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட புதை படிவங்கள் கிடைத்துள்ளது. இந்த பொருட்களின் கார்பன் ரேட்டிங் செய்ததன் மூலம் அது எந்த ஆண்டை சேர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.