என்ன சொல்றீங்க சீனாவுக்குள்ள கல் காடா? – அப்படி என்ன ஆச்சரியம் இருக்கு..
இந்த பூமியில் எத்தனையோ வகையான காடுகளை பார்த்திருப்பீர்கள். அதிலும் அடர்ந்த காடுகள் ஊசி இலை காடுகள் மற்றும் பசுமையாக இருக்கும் பசுமை மாறா காடுகள் என நாம் கூறிக் கொண்டே செல்லலாம்.
ஆனால் சீனாவில் இருக்கின்ற கல் காடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அட.. கல்லால் காடுகள் எப்படி உருவானது? என்று நீங்கள் உங்களுக்குள் பேசிக் கொள்வது எங்களுக்கு தெரிகிறது.
ஸ்டோன் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படக்கூடிய இந்த இடம் ஒரு முக்கிய சுற்றுலா தளமாக சீனாவில் திகழ்கிறது. ஏறக்குறைய 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டு இந்த காடுகள் காணப்படுகிறது. இங்கு பாறைகள் வடிவில் உயர்ந்து நிற்கக்கூடிய அமைப்புகள் உள்ளது. மேலும் அவற்றின் மேல் பகுதி மிகவும் கூர்மையாக உள்ளது.
இந்த ஸ்டோன் ஃபாரஸ்ட் 270 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்க வேண்டும். அந்த சமயத்தில் இந்த பகுதி ஆழமற்ற கடலாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்த சமயத்தை தான் இந்த கல் காடு உருவாகி இருக்க வேண்டும்.
நீர் மெல்ல, மெல்ல மறைந்து கடலும் மறைந்து போன சமயத்தில் நீர் மற்றும் காற்றின் தொடர்ச்சியான அரிப்பு காரணமாக கல் தூண்கள் காலப்போக்கில் உருவாக இருக்கலாம். இதில் பார்ப்பதற்கு சில சிங்கங்களாகவும், யானைகளாகவும், பறவைகளாகவும் நமக்கு காட்சி தருகிறது.
இதன் இடையிடையே மரங்கள் இருந்தாலும் உறுதியான பாறைகள் தான் மக்களின் மனதை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் ஸ்டோன் காடு நக்சி மற்றும் சானி சமூகங்களில் தாயகமாக உள்ளது என கூறலாம்.
இங்கு உள்ள இயற்கையான இடங்களில் நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், குகைகள் என அனைத்தையும் கண்டுகளிக்கலாம். மேலும் வழக்கத்துக்கு மாறாக இருக்கக்கூடிய இந்த காட்டை புவியியல் அதிசயத்தில் ஒன்று என கூறலாம்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த ஸ்டோன் காடுகள் பெரும்பாலும் சுண்ணாம்பு கற்களால் ஆனவை. பார்க்கும்போதே உங்கள் கண்களை மயக்க கூடிய விதத்தில் இந்த காடுகள் வினோதமான முறையில் இருக்கும்.
எனவே உங்களுக்கும் இது போன்ற புதுமையான விஷயங்கள் தெரிந்தால் கண்டிப்பாக அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.