“காலக் கணியம்” சொல்லும் 2037 – அட இவ்வளவு விளைவுகள் இருக்கா?
இந்த உலகில் எவ்வளவோ தீர்க்க தரிசிகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உதாரணமாக பாபா வங்காவை எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை துல்லியமாக தங்களது கணிப்பில் மூலம் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்கள்.
தீர்க்கதரிசிகள் எப்போதும் எதையும் தீர்க்கமாக கூறாமல் சூட்சுமமாக கூறியிருப்பார்கள். அந்த வரிசையில் நோஸ்ட்ராடாமஸ் கூறிய கருத்துக்கள் சித்தர் காகபுஜண்டர் கணிப்பையும் இணைத்துப் பார்க்கும்போது 2037 பல விதமான மாற்றங்களை நாம் சந்திக்க இருக்கிறோம் என்பது உறுதியாக தெரிகிறது.
கலியுகத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கோரக்கர் மட்டுமல்லாமல் நந்தி தேவர், சினேந்திரமாமுனிவர் போன்றோர், பல்வேறு பாடல்களில் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இவர்கள் கூறிய பாடல்களின் பொருளை தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீ விராட் பிரம்மேந்திர ஸ்வாமிகள் சாந்திர சிந்து எனும் வேதமாகிய “காலக் ஞானம்” எனும் தீர்க்கதரிசனத்தில் சுமார் 14,000 ஓடை சுவடிகளை தெலுங்கு மொழியில் எழுதி இருக்கிறார்.
இவர் எழுதிய ஓலைகளை ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து விட்டார். பிறகு அதில் கூறப்பட்டிருந்த கருத்துக்களை மக்களுக்கு கூறி வந்தார். இந்த புத்தகத்தில் கலியுகத்தின் தன்மை எப்படி இருக்கும்? என்பதை மிக நேர்த்தியான முறையில் விவரித்திருக்கிறார்.
தெலுங்கு மொழியில் இருந்த இந்த ஓலைகளை டி எஸ் தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்திருக்கிறார். இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை பார்க்கும்போது படு பயங்கரமாக உள்ளது.
குறிப்பாக இனி வரும் காலங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லாத தோற்றம், செயல் இருக்கும். மேலும் இரண்டும் ஒன்றாக போகிறது என்ற கருத்தை தெளிவாகக் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி மாறி ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெட்டுவிடும். அரசே பெண்களின் கரு சிதைவுக்கு ஆதரவு அளிக்கும்.
பெண்களின் தூய்மை, நாகரீகம் எல்லாம் மாயவசத்தால் அழிந்து போகும். மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வார்கள். பந்த பாசங்கள் அற்றுப்போகும்.
கணவனை நிந்தித்து துன்பப்படுத்தும் பெண்களும், பெற்ற தாய் மற்றும் தந்தையரை தேடாத மக்களும் அதிகரித்து விடுவார்கள். பெற்ற மக்களையே விற்று பிழைக்கும் நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுவார்கள்.
திருமணங்கள் வியாபாரமாக மாறிவிடும். மேலும் குலம், கோத்திரம் இன்றி திருமணங்கள் நடக்கும். இதற்கு அரசே ஆதரவு அளிக்கும். உயர் குல பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, நிழற்படம் என்ற மோகத்தில் சீர்கெட்டு அழிந்து விடுவார்கள்.
தெய்வ நம்பிக்கை குறையும். தரித்திரம் அதிகரிக்கும். குலத் தொழில்கள் மாறும் ஆலயங்களில் கள்ளத்தனம் நிலவும்.
கோயில்களில் பிராமணர்களுக்கு பதிலாக தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சர்களாக மாறுவார்கள். சைவர்கள் வேத சாஸ்திரத்தை விட்டு விலகுவார்கள். மாமிசம் போன்ற அசைவ உணவுகளையும் உண்பார்கள்.
வேதங்களின் பொருள் மாறிவிடும். வேதம் ஓதுவோர் சுயநலம் கருதி அதை வியாபாரமாக மாற்றுவார்கள். திருப்பதி ஆலய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படும். அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்கள் ஆட்சி உலகெங்கும் ஏற்படும்.
முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்து அரசு பாதிப்படையும். வஞ்சனைகள் தலை தூக்கும். புதிய அரசியல் அமைப்புகள் உருவாகும். தவறான வழியில் மக்கள் வழி நடத்தப்படுவார்கள். இதனால் மக்களின் நிலைமை சீரழிந்து போகும்.
மனிதர்கள் பறவையைப் போல விண்ணில் பறப்பார்கள். ஆனால் அவர்களின் பார்வை கழுகை போல கீழ்நோக்கி மாயமலங்களில் மோகம் கொள்ளும்படி இருக்கும் தர்மங்கள் அழியும்.
மனிதன் மனிதனாக இல்லாமல் எந்திரமாக மாறிவிடுவான். அநியாயங்கள் தலை தூக்கும். மனிதர்கள் மத்தியில் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வார்கள்.
போதைப் பொருட்கள் பெருகி அதன் வயப்பட்டு பெரும்பாலான மக்கள் அழிந்து போவார்கள். உணவுப்பொருட்களின் தரம் குறைந்து போகும். கலப்பட விற்பனை அதிகரிக்கும். புதிய நோய்கள் பரவும். கண் பார்வை விரைவில் போகும் புதிய, புதிய நோய்கள் தோன்றி மக்களை அழிக்கும்.
செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகளுக்கு தங்க நகை பூசை போட்டு தங்கம் என்று விற்கக்கூடிய நிலை ஏற்படும். மூன்று தலை கொண்ட பசு ஜெனிக்கும். அவற்றுக்கு இரண்டு யோனிகள் இருக்கும்.
நீ கூறிய கருத்துக்களை படிக்கும் போது வரவிருக்கும் கலி யுகத்தில் முடிவை நினைத்து மனதில் திகில் எண்ணம் ஏற்படுகிறது அல்லவா..