இந்தியாவை ஆண்ட வினோத ராஜாக்கள்? – என்னென்ன செய்தார்கள் தெரியுமா?
இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டன் அரசு இந்திய வளத்தை சுரண்டி சொத்து செய்தது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்னரே இங்கு நிறைய அரசர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் வித்தியாசமான வினோத பழக்கங்களை கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட ஐந்து வினோதமான ராஜாக்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக நாம் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாமின் பேப்பர் வெயிட் என்ற மன்னரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.
இவர் வாழ்ந்த காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் இவர்தான். வைரங்களை சப்ளை செய்து வந்த கோல் கொண்டா சுரங்கத்தின் அதிபதியாக இவர் விளங்கி இருக்கிறார். இவரிடம் உலகிலேயே ஐந்தாவது பெரிய வைரமான ஜேக்கப் வைரம் இருந்தது. 185 கேரட் எடை உடைய இந்த வைரத்தை இவர் காகித எடையாக பயன்படுத்தி இருக்கிறார்.
1612 ஆம் ஆண்டு மைசூரை வாடியர்கள் என்ற வம்சத்தால் ஆக்கிரமித்து இருந்தபோது திருமலை ராஜாவை அரியணையில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தை கைப்பற்றினார்கள். அந்த சமயத்தில் வாடியர்கள் ராணி அலமேலு அம்மாவிடமிருந்து ராஜ குடும்ப நகைகளை கொடுக்கும் மாறு கட்டளை இட்டார்கள்.
இதனை அடுத்து மனது பொறுக்காமல் ராணி “தலைக்காடு தரிசு நிலம் ஆகட்டும், மலங்கி சுழலாய் மாறட்டும்” மைசூர் ஆட்சியாளர்களுக்கு குழந்தை இல்லை என்று சாபம் விடுத்ததை அடுத்து, வாடியர்கள் ராணிக்கு பல பகுதிகளிலும் சிலை வைத்தும் அந்த சாபத்திலிருந்து தப்பிக்கவில்லை.
அடுத்ததாக பாட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங் பத்து முறை திருமணம் செய்து கொண்டதோடு, வைரங்களையும் சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர். இவருக்கு எண்ண முடியாத மனைவிகளும், 88 குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள்.
இவர் வைர மார்பு கவசத்தை அணியாமல் நிர்வாணமாக வருடத்திற்கு ஒரு முறை மக்கள் முன் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும் இவரது நடை மிகுந்த உற்சாகத்தோடு இருப்பதால் அவரது உறுப்பு தீய ஆவிகளை அப்பகுதியில் இருந்து விரட்டக்கூடிய தன்மை கொண்டிருந்ததாக பலரும் நம்பி இருக்கிறார்கள். இந்த விஷயத்தை மிட்நைட் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
முகமது மகாபத் கான் மூன்று ஜுனாகத்தின் மகாராஜாவாக இருந்தவர். நாய்களின் மீது அதீத பிரியம் கொண்டிருந்தார். இவர் சுமார் 800 நாய்களை வளர்த்திருக்கிறார். மேலும் அந்த நாய்களுக்கு தனியாக சொகுசான வீடுகளை கட்டிக் கொடுத்து பணியாட்களை நியமித்திருக்கிறார்.
இந்த நாய்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பிரிட்டிஷ் மருத்துவர்கள் தான் மருத்துவம் பார்ப்பார்களாம்.
மகாராஜா சவாய் மாதோ சிங் II இரண்டு ஜெய்ப்பூரின் மன்னராக இருந்தவர் அந்த காலத்திலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர். இவர் இரண்டு பெரிய அளவு வெள்ளி பாத்திரங்களை செய்து இங்கிலாந்து செல்லும் போது அந்த பாத்திரத்தில் கங்கை நதியின் நீரை கொண்டு சென்றுள்ளார். அந்த பாத்திரங்களை உருவாக்க சுமார் 14000 வெள்ளி காசுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். என்ன பாத்திரங்கள் இன்னும் அருங்காட்சியகத்தில் உள்ளது.
இப்போது கூறுங்கள் பிரிட்டிய ஏகாதிபத்திய ஆட்சி இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே எவ்வளவு சொகுசாக, வித்தியாசமான முறையில் நமது மன்னர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் நமக்கு நிறுவனம் ஆக்கி உள்ளது அல்லவா.