தமிழர்களின் வரலாற்றை பேசும் சங்க கால நூல் அகநானூறு..! – அட எவ்வளவு சிறப்புக்கள் இருக்கா?
தமிழர்களின் சங்க கால நூல்களைப் பற்றி அதிகமாக உங்களிடம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் Deep Talk தமிழ் நேயர்கள் அனைவருக்கும் தமிழின் சிறப்பு இயல்புகள் மிக நன்றாக தெரிந்து இருக்கும்.
அந்த வகையில் சங்க கால நூல்களான அகநானூறு மற்றும் புறநானூறு பற்றி உங்களுக்கு தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவை இரண்டுமே சங்ககாலத்தை சேர்ந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்று தான்.
இனி அகநானூறு பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். அகத்திணையைச் சார்ந்த நூல் என்பதால் இதனை அகநானூறு என்று கூறுகிறோம். மேலும் இதில் 400 பாடல்கள் உள்ளது. எனவே தான் அகம்+ நூறு= அகநானூறு என்ற பெயர் வந்தது.
தமிழ் மக்களின் அகத்திணையை மிக அழகாக எடுத்துக் கூறும் இந்த நூலுக்கு நெடுந்தொகை என்ற பெயரும் உள்ளது. இதில் அடங்கியுள்ள பாடல்கள் முழுவதும் ஒரு புலவராலோ அல்லது ஒரே காலத்தில் வாழ்ந்து வந்த புலவர்களால் இயற்றப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.
மேலும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகவும் அகநானூறு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பல பாடல்களின் தொகுப்பாக உள்ள இந்த அகநானூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.
எட்டுத்தொகை நூல்களில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றி சொல்லக்கூடிய நூல் அகநானூறை மட்டுமே குறிக்கிறது.
இந்த அகநானூறை மூன்று பகுப்புக்களாக தொகுத்து இருக்கிறார்கள். அவை களிற்றியானை நிரை மணிமிடை பவளம், நித்திர கோவை என்பதாகும்.
இந்த அகநானூற்றில் பலவகையான வரலாற்றுச் செடிகளும் செய்திகளும் புதையுண்டு காணப்படுகிறது. குறிப்பாக இதனை நாம் புறப்பொருள் செய்திகள் என்று கூறலாம். தித்தம், மத்தி, நன்னன், கரிகாற் பெரு வளத்தான், செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போன்ற பெருநில வேந்தர்களை பற்றிய செய்திகள் காணப்படுகிறது.
மேலும் ஆதன் எழினி, பாணன், பழையன் போன்ற குறுநில மன்னர்கள் பற்றிய எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளையும் தருகிறது. அதுமட்டுமா? அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது காஞ்சி நண்பர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கை ஆற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்று செய்தியில் இந்த நூலில் 20 மற்றும் 25 ஆம் பாடல்களில் வருகிறது.
தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட குடவோலை முறை பற்றி அகநானூற்றில் குறிப்புகள் உள்ளது. மேலும் யவனர்கள் வாசனைப் பொருளான மிளகை பெறுவதற்காக தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்த செய்தியையும் கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழரின் திருமண நிகழ்ச்சி முழுமையையும் புறநானூற்றின் எண்பத்தி ஆறு மற்றும் 136 ஆவது பாடல்களில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது.
தமிழர்களின் வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டை மிக அழகாக எடுத்து உணர்த்தக்கூடிய அகநானூறை நாம் படிக்கும் போது நமது வாழ்க்கையை சிறப்பாக நடத்த இது உதவும் என்பதை எந்தவிதமான ஐயமும் இல்லை.