• July 27, 2024

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீர ஜக்கம்மாள்..!” – சிறப்புக்கள் என்ன?

 வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீர ஜக்கம்மாள்..!” – சிறப்புக்கள் என்ன?

Jakkamma

வீரத்தின் தெய்வமாக விளங்கிய ஜக்கம்மா தேவியின் இயற்பெயர் ஜக்காதேவி இது தான் மருவி ஜக்கம்மா தேவி என்று மாறியது. மேலும் இந்த ஜக்கம்மாள் தேவிக்கு சகதேவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இதில் சக என்றால் வாள் என்ற பொருள் தரும். வீரத்தின் வடிவமாக ஜக்கம்மாள் விளங்குகிறார். கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவி குத்துக்கல்லில் அருள் பாலித்து வருவதாக சொல்லப்பட்டது. மேலும் இதன் மீது இரண்டு வாள்களை வைத்து வணங்கி இருக்கிறார்கள்.

Jakkamma
Jakkamma

ஜக்கம்மா தேவியின் முகத்தை தங்கத்தால் உருவாக்கி வழிபட்ட இவர்கள் தேவிக்கு படையல்களாக கம்பு, கொழுக்கட்டை, திணை மாவு, பழங்களை படைத்திருக்கிறார்கள். இந்த படையலே இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

கம்பளத்தில் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாமிய படையெடுப்பால் தாங்கள் இருந்த இடத்திலிருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இதனை அடுத்து அந்த இஸ்லாமிய மன்னர் ஒருவர் கம்பளத்து சமுதாயப் பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே நாயக்கர் இனத்தை சேர்ந்த பெண்களின் பாதுகாப்புக்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் தங்கள் குல பெண்களை காப்பாற்ற தெற்கு நோக்கி தமிழகத்திற்கு செல்ல ஆணையிட ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் அங்கிருந்து தெற்கு நோக்கி சென்று இருக்கிறார்கள்.

Jakkamma
Jakkamma

அப்படி இவர்கள் தெற்கு நோக்கி செல்லும்போது வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும், வீரம், மாந்திரீகம் போன்றவற்றால் அவர்களுக்கு தீமைகள் ஏற்பட்ட சமயத்தில் ஜக்கம்மா காத்ததால் அவரை காவல் தெய்வமாக வழிபட துவங்கியிருக்கிறார்கள். மேலும் ராஜ கம்பள ஜாதியினரை குல தெய்வமாக வழிபட துவங்கியிருக்கிறார்கள்.

ஜக்கம்மாவுக்கு பிறந்த 9 குழந்தைகள் தான் இந்த வம்சத்தின் ஒன்பது கம்பளத்து மக்கள் என்று இன்று வரை நம்பப்பட்டு வருகிறது. காடு ஆறு மாதம் நாலு ஆறு மாதம் என வாழ்ந்து வரும் கோடங்கிகள் வணங்கி வரும் தெய்வமும் ஜக்கம்மாள்.

எனவே தான் ஜக்கம்மாள் வாக்கு பொய் ஆகாது என்று கூறுவார்கள். மயானத்தில் அர்த்த சாம பூஜை ஜக்கம்மாளுக்கு செய்யப்பட்டு, ஒவ்வொரு வீடுகளுக்கும் குறி சொல்லக் கூடிய நிகழ்வு என்றும் கிராமப் பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.

Jakkamma
Jakkamma

ஆண்கள் மட்டுமே ஜக்கம்மாவுக்கு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். பல வகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் ஜக்கம்மாவுக்கு உள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.இந்த அம்மனுக்கு என்று தமிழகத்தின் பல பகுதிகளில் கோயில்கள் உள்ளது.

உங்களுக்கும் ஜக்கம்மாள் பற்றி வேறு ஏதேனும் விஷயங்கள் தெரிந்திருந்தால் அவற்றை மறக்காமல் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த கட்டுரை பிடித்திருந்தால் உங்களுடைய கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து விடுங்கள்.