• September 13, 2024

‘மீன் எண்ணெய்யை நன்மைகள்’.. ஒமேகா த்ரீ யில் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

 ‘மீன் எண்ணெய்யை நன்மைகள்’.. ஒமேகா த்ரீ யில் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

Fish oil

ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஆரோக்கியத்தோடு இருக்கும் போது தான் மனிதன் எதையும் எளிதில் சமாளிக்க கூடிய சக்தியை பெறுகிறார்.

அப்படிப்பட்ட உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவிகரமாக இருக்கக்கூடிய ஒமேகா 3 மாத்திரையின் நன்மைகள் என்னென்ன, அவற்றை எடுத்துக் கொள்வதால் என்ன பயன்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Fish oil
Fish oil

நம் உடலுக்கு அதிக அளவு தேவைப்படுகின்ற ஒமேகா-3 மேல் இருந்து மீன் எண்ணெயாக கொழுப்பு அமிலங்களாக தயாரிக்கப்படுகிறது. இதனை நாம் அன்றாட உண்ணுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.

இந்த ஒமேகா மூன்றில் நாம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் உள்ளது. குறிப்பாக இந்த ஒமேகா 3 நீண்ட பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களாக உள்ளது.

ஒமேகா 3 நீங்கள் அனுதினமும் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் பதட்டம் குறைகிறது. மேலும் குடல் பகுதி ஆரோக்கியமாக மாறுகிறது.

Fish oil
Fish oil

சுவாச பிரச்சனைகளில் ஒன்றான ஆஸ்துமா நோயை தடுக்க உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், இதய நோய்களின் தாக்குதல்களில் உங்களை பாதுகாக்கவும் ஒமேகா மூன்று உதவி செய்கிறது.

இது உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறது. கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் உற்பத்தியை சரியான சமநிலையில் வைத்துக்கொள்ள ஒமேகா த்ரீ மிகவும் சிறப்பாக பயன்படுகிறது.

நீங்கள் கர்ப்ப காலத்தில் ஒமேகா திரியை பயன்படுத்துவதின் மூலம் குறை பிரசவம் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் எடை அதிகரிக்கும். சரும நோய்களை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த ஓமேகா 3 மாத்திரைக்கு உள்ளது.

Fish oil
Fish oil

மேலும் பெருங்குடல் மார்பக புற்று நோய்களை தடுக்கக்கூடிய சக்தி கொண்ட இந்த ஒமேகா மூன்று எலும்பு மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கல்லீரலில் இருக்கும் அபரிமிதமான கொழுப்பை குறைக்கவும் பயன்படுகிறது.

ஒமேகா மூன்றை நீங்கள் எடுத்துக் கொள்வதின் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். எனவே மருத்துவரின் ஆலோசனையின் படி நீங்கள் இந்த ஒமேகா மூன்றை எடுத்துக் கொள்ளலாம்.