மனதில் உள்ளதை நிறைவேற்றும் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி..! – அதுவும் நம் தேசத்திலா?
உங்கள் மனதில் நிறைவேறாத ஆசை இன்றுவரை உள்ளதா? அப்படி என்றால் உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அது கட்டாயம் நிறைவேற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவசியம் போய் பார்க்க வேண்டிய மந்திர ஏரி தான் கேச்சியோபால்ரி (Khecheopalri Lake) ஏரி.
இந்த ஏரியை பார்வையிட வரக்கூடிய மக்கள் இந்த ஏரியின் முன் நின்று கொண்டு தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்ற வேண்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டிக் கொள்ளும் போது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதாகவும் கூறி இருக்கிறார்கள்.
இயற்கை அற்புதங்களில் ஒன்றாக கருதப்படக் கூடிய இந்த ஏரியை த மிஷின் என்றும் அழைக்கிறார்கள். உலக அளவில் மக்களை ஈர்த்து இருக்கக் கூடிய இந்த ஏரி சிக்கிம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
சிக்கிமில் இருக்கும் பெல்லிங் என்ற டவுனில் இருந்து சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஏரியானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த ஏரி அமைந்திருக்கும் பகுதியானது இயற்கை சூழலோடு இருப்பதோடு மனதிற்கு நிம்மதியை தரக்கூடிய வகையில் இருக்குமாம். கரடு முரடான மலை பாதைகள் மற்றும் அடர்ந்த காடுகளை நீங்கள் தாண்டி சென்றால் இந்த ஏரியை அடையலாம். மிகவும் ரம்யமான அமைதியான சூழலில் இந்த ஏரி அமைந்திருக்கும்.
இந்த ஏரியின் அருகில் நீங்கள் புத்த துறவிகளையும் பார்க்க முடியும். மேலும் ஏரியின் தண்ணீர் மிக பரிசுத்தமாக இருப்பதோடு, இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய தேசிய பூங்காவில் பல வகையான உயிரினங்களும் தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஏரியானது ஆன்மீக முக்கியத்துவத்தை கொண்டது. இங்கு புத்தம் மற்றும் இந்து மதத்தவர்கள் இருக்கிறார்கள். புத்த குருவான குரு பத்ம சம்பவா என்பவருடன் இந்த ஏரி தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் தாரா ஜெடாசுன் டோல்மாவின் பாத சுவடானது சிவபெருமானின் பாத சுவடு என்று அழைக்கப்படுகிறது.
ஏரியின் அருகே காணப்படும் குகையில் சிவபெருமான் தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நிகழும் நாக பஞ்சமி அன்று மக்கள் ஒன்று கூடி வெண்ணெய், நெய் விளக்குகளை ஏற்றி ஏரியை சுற்றிலும் கொடிகளை பறக்க விட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.
இந்த ஏரிகளின் மீது எந்த விதமான இலைகளும் மிதக்காது. இந்த புனித நீரானது பலவிதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுவதாக அங்கு வாழும் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கிறார்கள். எந்த ஒரு சமயத்திலும் இந்த ஏரியின் தண்ணீர் இதுவரை மாற்றவில்லை என்பதையும் கூறி இருக்கிறார்கள்.