• July 27, 2024

“எஸ்கேப் ரோடு பற்றி தெரியுமா?” –  ஆங்கிலேயர்கள் எதற்காக இந்த ரோட்டை அமைத்தார்கள்..

 “எஸ்கேப் ரோடு பற்றி தெரியுமா?” –  ஆங்கிலேயர்கள் எதற்காக இந்த ரோட்டை அமைத்தார்கள்..

Escape Road

இந்தியாவை பல ஆண்டுகளாக ஆண்ட வெள்ளையன் பலவிதமான கட்டிடங்கள் மட்டுமல்லாமல் மலைப்பாதையில் பயணம் மேற்கொள்வதற்காக பாதைகளை அமைத்திருந்தான்.

அந்த வகையில் ஊட்டி மட்டுமல்லாமல் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கொடியேற்றங்கள் அமைய மூல காரணமாக இருந்த வெள்ளையன் பலவிதமான பாதைகளை அங்கு செல்வதற்காக அமைத்திருந்தார்கள்.

Escape Road
Escape Road

மேலும் ஆங்கிலேயர்கள் அமைத்த இந்த எஸ்கேப் ரோடு ஆனது கொடைக்கானலின் சிறப்பு அம்சம் என்று கூறலாம். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ள உள்ளது.

இங்கு காணப்படும் பச்சை பசேல் என்ற பள்ளத்தாக்கு தான் சுற்றுலா வரும் மக்களை அதிக அளவு கவரக்கூடிய வகையில் உள்ளது. இந்த இடத்தை சூசைட் பாயிண்ட் என்று அழைக்கிறார்கள். இந்தப் பகுதியை அடைய குறுகலான காட்டு வழி பாதையை நீங்கள் கடந்து செல்ல வேண்டும்.

அதுமட்டுமா? கொடைக்கானலில் இருக்கும் ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீர் நிலையானது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. நட்சத்திர வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரியில் படகு சவாரி, சைக்கிளிங் மற்றும் குதிரை சவாரி போன்றவை புகழ்பெற்றது.

Escape Road
Escape Road

இதுபோலவே மற்றொரு சிறப்பு அம்சம் கொடைக்கானலில் காணப்படுகிறது. ஆனால் இது பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது. அது மூணாறு செல்லும் வழியில் இருக்கும் எஸ்கேப் ரோடு என்று அழைக்கப்படுகின்ற பகுதி தான்.

இந்தப் பாதை எதற்காக உருவாக்கப்பட்டது என்ற மரணம் தெரிந்தால் உங்களுக்குள் சற்று திகில் ஏற்படும். இந்தப் பாதையானதே இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கொடைக்கானலில் இருந்து ஆங்கிலேயர்கள் கொச்சிக்கு விரைவாக சென்றடைய உருவாக்கப்பட்ட பாதை என்று வரலாறு கூறுகிறது.

Escape Road
Escape Road

இதனால் தான் இந்த ரோட்டுக்கு எஸ்கேப் ரோடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தப்பிச் செல்வதற்கு என்றே ஒரு பாதையை உருவாக்கிய வெள்ளையர்களை என்னவென்று கூறுவது.

உங்களுக்கும் ஆசை இருக்கும், கொடைக்கானல் செல்ல வேண்டும் என்று. அப்படி செல்லும் பட்சத்தில் நீங்கள் இந்த பகுதியை கண்டிப்பாக சென்று பாருங்கள். இது போன்ற புதுமையான கருத்துக்களை தெரிந்து கொள்ள எப்போதும் நீங்கள் எங்களோடு இணைந்து இருங்கள். உங்களது கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.