• October 5, 2024

 “கரிகாலன் கட்டிய கல்லணை..!” –  அறிந்திடாத சிறப்புகள்..

  “கரிகாலன் கட்டிய கல்லணை..!” –  அறிந்திடாத சிறப்புகள்..

Kallanai

தமிழ் மன்னர்களின் சிறப்பை எடுத்துக்காட்ட கூடிய விதமாக கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்றளவும் உறுதியாக நிற்பதின் மூலம் அவர்களின் கட்டுமான திறன் வெளிப்பட்டுள்ளது.

மேலும் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்த பெருமை கொண்டவன் கரிகாலன்.

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கக்கூடிய இந்த அணையானது நொடிக்கு இரண்டு லட்சம் கன நீர் பாயும் தன்மையோடு இருந்த பகுதியில் அணை கட்டப்பட்டது.

Kallanai
Kallanai

இந்த அணையின் கட்டுமானத்திற்காக மிகப்பெரிய கற்களை கொண்டு வந்து போட்டனர். பின்பு இந்த பாறைகள் நீரின் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்னுள் சென்றது. 

இதனை அடுத்து தண்ணீரில் ஒட்டாத களிமண்ணை கொண்டு அதன் மீது புதிய பாறைகளை வைத்து இரண்டையும் பூசி ஒட்டிக் கொள்ளும் விதமாக இந்த அணையை கட்டி இருக்கிறார்கள்.

1839 ஆம் ஆண்டு கல்லணை மீது அமைக்கப்பட்டதால், அதன் மேல் நின்று கொண்டு பார்த்தாலே மொத்த கல்லணையின் அழகும் மிகச் சிறப்பாக தெரியும்.

Kallanai
Kallanai

உலகின் மிகப் பழமையான அணைகளில் ஒன்றாக இருக்கும் இந்த அணை தற்போது வரை புழக்கத்தில் உள்ளது என்பது மிகவும் சிறப்பான விஷயமாகும். பழந்தமிழரின் தொழில்நுட்பத்தை விளக்கக்கூடிய வகையில் இந்த கல்லணை உள்ளது. 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

விவசாயிகளின் துயரத்தை போக்குவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகச் சிறப்பான முறையில் திட்டமிட்டு கரிகால சோழனால் கட்டப்பட்ட இந்த கல்லணை நீர் மேலாண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

Kallanai
Kallanai

இந்த அணையின் அடித்தளத்தை ஆராய்ந்த ஆதார் காட்டன் என்பவர் பழந்தமிழரின் கட்டுமான திறனை பார்த்து வியந்து பாராட்டி இருக்கிறார். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில ஆட்சியின் போது இந்த கல்லணையை புதுப்பித்து இருக்கிறார்கள்.

அது மட்டுமா கேப்டன் கால்ட்வெல், மேஜர்சிம், சர் ஆதார் காட்டன் போன்ற வல்லுநர்கள் கரிகாலன் கட்டிய கல்லணையை பார்த்து அதை இடிக்காமல் புதுப்பித்தது இதனுடைய பெருமையான விஷயமாகும்.

உங்களுக்கும் இது போன்ற புதுமையான தகவல்கள் இது பற்றி தெரிந்திருந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.