• July 27, 2024

வாழ்க்கையில் மனிதன் சிரிப்பது மிக முக்கியமா? உளவியல் என்ன சொல்கிறது…

 வாழ்க்கையில் மனிதன் சிரிப்பது மிக முக்கியமா? உளவியல் என்ன சொல்கிறது…

Laugh

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல் வரிகள் உணர்த்தக் கூடிய உண்மையை உளவியல் கூறியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு மனிதனும், அனுதினமும் சிரித்து வாழ்வதின் மூலம் அவருக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதாக உளவியல் கூறுகிறது.

அந்த வகையில் சிரிப்பு என்பது மனித வாழ்வில் உண்ணுவது, உறங்குவது போல மனிதனின் மனதிற்கு தேவையான ஒரு முக்கியமான செயல் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

Laugh
Laugh

எனவே தான் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள். சிரித்து சந்தோஷமாக இருக்கும் போது நமது உடலில் ஏற்படும் எல்லாவிதமான சோர்வுகளும் நீங்கி உடல் மட்டுமல்லாமல், மனதும் புத்துணர்ச்சி அடைவதாக உளவியல் புத்தகங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறது.

ஆரம்ப கட்டத்தில் கலகலப்பாக பேசி நாள் அடைவில் சிலர் எதையோ பறிகொடுத்ததைப் போல மாறிவிடுவார்கள். இதற்கு அவர்கள் ஏதாவது ஒரு வழியில் காயப்பட்டு இருக்க வேண்டும். எனவே இத்தகைய காயங்களில் இருந்து நீங்கள் விடுபட்டு வெளிவர உங்களுக்கு நட்பு துணை செய்யும்.

அது போலவே ஒருவன் தவறி கீழே விழும் போது நக்கலாக சிரிப்பது என்பது  சமுதாயத்தில் உள்ளது. அதை விடுத்து தேவையான விஷயத்தை பங்கு போட்டுக் கொண்டு சிரித்து வாழ்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளைப் பெற முடியும்.

Laugh
Laugh

எனவே எதற்கும் உணர்ச்சி படுவதை விடுத்து உங்கள் உணர்ச்சிகளை கையாளக்கூடிய திறன் இருக்கும் பட்சத்தில் உங்களால் எதையும் சிறப்பாக கையாள முடியும்.

எப்போதுமே நீங்கள் எதற்காகவும் உங்களுடைய இயல்பான சிரிப்பை விட்டுக் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஆபத்தான சூழலிலும் நீங்கள் சிரிப்பதன் மூலம் உங்களுக்கு அந்த ஆபத்து நீங்கி, நீங்கள் அதிலிருந்து வெளிவர தேவையான உத்வேகத்தையும் நம்பிக்கையும் உங்களது சிரிப்பு உங்களுக்கு அளிக்கும்.

இதனைத் தான் இடுக்கன் வருங்கால் நகு என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். மனிதநேயத்தோடு இருக்க உங்களுக்கு சிரிப்பு பக்கபலமாக இருக்கும் என்பதை இன்று உணர்ந்து செயல்பட்டால் எண்ணற்ற நன்மைகளை இதன் மூலம் நீங்கள் பெற முடியும்.

Laugh
Laugh

எனவே எத்தகைய சந்தர்ப்பத்திலும் நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளவும் புத்துணர்வாக வைத்துக் கொள்ளவும், கடவுள் மனித இனத்திற்கு கொடுத்த அற்புதமான இந்த சிரிப்பை பயன்படுத்தலாம்.

மேலும் நீங்கள் வாய் விட்டு சிரிப்பதை பற்றி ஏளனமாகவோ, வேலியாகவோ எண்ண வேண்டாம். உங்களது சிரிப்பு உங்களை மேம்படுத்தும் என்ற உளவியல் உண்மையைப் புரிந்து கொண்டு தினமும் அரை மணி நேரமாவது வாய்விட்டு சிரியுங்கள் வாழ்க்கையை வளமாக வாழுங்கள்.