• November 5, 2024

“ஒலி அதிர்வை பொறுத்து மந்திரத்தின் பலன்..!” – ஓர் ஆய்வு அலசல்..

 “ஒலி அதிர்வை பொறுத்து மந்திரத்தின் பலன்..!” – ஓர் ஆய்வு அலசல்..

Mantras

இந்து மதத்தை பொறுத்தவரை எண்ணற்ற மந்திரங்கள் உள்ளது. மந்திரத்தை உச்சரிப்பது மூலம் நமக்கு எண்ணற்ற பலன்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இன்னும் மக்கள் மத்தியில் சமஸ்கிருத மந்திரங்களை கூறுவதா? இல்லை தமிழ் மந்திரங்களை கூறுவதா? என்ற ஒரு நிலைப்பாடு உள்ளதோடு எந்த மந்திரத்தை சொல்வதால் பலன்கள் அதிகம் கிடைக்கும் என்ற தடுமாற்றம் உள்ளது.

மந்திரங்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்ததாகத்தான் இதுவரை கருத்துக்கள் உள்ளது. அத்தகைய மந்திரங்களை நீங்கள் சொல்லும் போது அந்த மந்திரங்கள் உங்கள் உள்ளத்திற்கும், உடலுக்கும் மிகப்பெரிய ஆற்றலை அள்ளித் தருகிறது.

இதற்கு காரணம் என்ன என்று தெரியுமா? நீங்கள் கட்டாயம் அதை தெரிந்து கொண்டாலே உங்களுக்குள் இருக்கும் மனக்குழப்பம் நீங்கி எந்த மந்திரத்தை எப்படி நாம் உச்சாடனம் செய்ய வேண்டும் என்பது புரியும்.

Mantras
Mantras

பொதுவாகவே மந்திரங்களை நீங்கள் உச்சரிக்கும் போது அதற்கு உரிய ஒலி அலைகளை பயன்படுத்தி உச்சரிப்பது அவசியமான ஒன்றாகும். இந்த ஒலி அலைகள் உங்களது பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே தான் சமஸ்கிருத மொழியை தேவர்களின் பாஷை என்று கூறுகிறார்கள். இந்த சமஸ்கிருத மொழியில் வகுக்கப்பட்டிருக்கக் கூடிய மந்திரங்களின் ஒலி வரிசையில் தக்கவாறு நீங்கள் உச்சரிக்கும் போது சப்த அலைகள்  உங்களுக்கு சக்திகளை தருகிறது.

இதற்காகத்தான் சிறு வயது முதலேயே இந்த மந்திரங்களை உச்சரிக்க பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது, மந்திரங்களை தவறாக உச்சரிப்பதால் நன்மை கிடைப்பது இல்லை. உங்கள் உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்து இந்த மந்திரங்களை நீங்கள் உச்சரிக்கும் போது உங்கள் மூளை சுறுசுறுப்பாக தோடு உடலில் உள்ள அந்த அவயங்கள் சீராக இயங்கும் என கூறலாம்.

Mantras
Mantras

எனவேதான் மந்திரங்களை உச்சரிக்கும் முன்பு சில விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மந்திரங்களை உச்சரிக்கும் போது நீங்கள் அமரக்கூடிய முறையும், அணியக்கூடிய உடையும் இதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் ஈர ஆடையோடு நீங்கள் மந்திரங்களை ஜெபிக்கும் போது அதனுடைய சக்தி பன்மடங்காக பெருகும்.

மேலும் நீங்கள் மந்திரங்களை தவறாக ஜெபித்து விட்டால் அந்த மந்திரத்தின் பலனது எதிர்மறையாக மாறிவிட வாய்ப்புக்கள் உள்ளது. எனவே மந்திரங்களை நீங்கள் மறக்காமல் சரியான ஒலியை பயன்படுத்தி தான் உச்சரிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மந்திரங்களைக் கேட்ட பிறகு அதற்கு ஏற்ப நீங்கள் அதை உச்சரிக்க வேண்டும். உதாரணமாக இந்து சமயத்தில் ஓம் எனும் மந்திரம் முதன்மையான மந்திரமாக திகழ்கிறது. எல்லா மந்திரங்களுக்குமே இந்த ஓம் முதலில் வரும் பிரணவ மந்திரமான இந்த மந்திரத்தை நீங்கள் முதலில் கூறித்தான் மற்ற மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

இந்த ஓம் என்ற எழுத்தை நீங்கள் உச்சரிக்கும் போது அந்த எழுத்தானது உங்கள் நாபி கமலத்தின் அடியில் இருந்து ஓசையை எழுப்பக்கூடிய வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்வதின் மூலம் உங்களுக்கு மன இறுக்கம், நோய்கள் போன்றவை நீங்கும்.

Mantras
Mantras

அதுபோலவே சமஸ்கிருதத்தில் இருக்கும் பல்வேறு வகையான காயத்ரி மந்திரங்களை நீங்கள் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய எண்ணிக்கையில் தினமும் உச்சரிக்கும் போது உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், புத்துணர்வோடும் நீங்கள் விளங்குவீர்கள்.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு, அந்த பலன் கண்டிப்பாக கிடைக்க வேண்டும் எனில் அந்த மந்திரத்தின் ஒலி அலை வரிசையை நீங்கள் கட்டாயம் பின்பற்றுவதின் மூலம் உங்களுக்கு நிச்சயமான பலன் கிடைக்கும்.

எனவே நம்பிக்கையோடு மந்திரங்களை நீங்கள் பிரம்ம முகூர்த்த வேளைகளில் உச்சரிப்பதால் எண்ணற்ற பலன்களை அடைக்கலாம். இந்த மந்திரங்கள் உங்கள் உடலில் அதிர்வுகளாக மாறி உங்கள் மன நலத்திற்கு பக்க பலமாக இருக்கும்.