• July 27, 2024

“தமிழர்கள் கொண்டாடும் ஆடி கிருத்திகை..!”- சிக்கல்கள் தீர இப்படி கொண்டாடுங்கள்..!

 “தமிழர்கள் கொண்டாடும் ஆடி கிருத்திகை..!”- சிக்கல்கள் தீர இப்படி கொண்டாடுங்கள்..!

Aadi Krithigai

தமிழ் கடவுளான ஆறுமுகப்பெருமானை வழிபட நம்மில் மண்டி கிடக்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் தேடி வரும் என்பது முன்னோர்கள் சொன்ன வாக்கு. அந்த வகையில் வரும் ஒன்பதாம் தேதி ஆகஸ்ட் மாதம் புதன் கிழமை ஆடி கிருத்திகை வரவுள்ளது.

இந்தக் கிழமையில் தமிழகம் எங்கும் உள்ள முருகப்பெருமானின் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெறுவதற்காக விரதம் இருந்து ஆறுமுகப்பெருமானை வழிபடுவார்கள்.

இந்த ஆடி கிருத்திகை ஆனது ஆதிக்கிருத்திகை என்றும் அழைக்கப்படுகிறது. பன்னெடும் காலமாகவே தமிழ் மக்களால் சீரும், சிறப்புமாக கொண்டாடப்படுகின்ற இந்த திருநாளானது ஜோதிட சாஸ்திரப்படி அனுஷ்டிக்கப்படுவதின் மூலம் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால் ஏற்படுகின்ற திருமண தடை, செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் மண்,மனை சொத்து பிரச்சனைகளில் ஏற்படும் வழக்குகளை தீர்த்து வைக்கும்.

Aadi Krithigai
Aadi Krithigai

அது மட்டுமல்லாமல் சகோதரர்களால் ஏற்படக்கூடிய சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் தசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடி கிருத்திகை அன்று முருகனை வழிபட கவலைகள் அனைத்தும் பனி போல உருகி பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து வாழ்வில் அனைத்து வித சௌபாக்கியங்களையும் முருகப்பெருமான் கொடுப்பார், என்பது இன்று வரை அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆடி கிருத்திகை அன்றுதான் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்ததாக கூறியிருக்கிறார்கள். மேலும் சிவனின் அருளோடு சூரனை அளிக்க சரவண பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார்.

இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் அவர்களை கௌரவிக்கும் வகையில் கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாக உள்ளதோடு அவரை கார்த்திகேயன் என்று அழைத்தார்கள். எனவே கிருத்திகை அன்று முருகனுக்கு விரதம் இருப்பது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Aadi Krithigai
Aadi Krithigai

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் வரும். எனினும் குறிப்பாக தை கிருத்திகை, ஆடி கிருத்திகை முருகனுக்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகப்பெருமானின் கோயில்களில் காவடி எடுத்தல், அலகு குத்தி வழிபடுதல் நேற்று கடன்களை செய்தல் போன்றவை அனைத்தும் நடக்கும்.

பொதுவாகவே ஆடி மாதத்தில் அம்மனின் ஆற்றல் அதிகளவு துடிப்புடன் காணப்படும். 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரமாக வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்தது. இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

எனவே இந்த ஆடி கிருத்திகையை நீங்கள் கடைப்பிடித்து விரதம் இருப்பதால், கீழ்கண்ட பலன்கள் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும். அந்த வகையில் உங்களுக்குத் தேவையான ஞானம், சக்தி, ஆரோக்கியம் வாழ்க்கையில் செழிப்பு தொட்டதெல்லாம் வெற்றி அடைய இந்த நாளில் நீங்கள் விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும்.

Aadi Krithigai
Aadi Krithigai

வாழ்க்கையில் ஏற்படுகின்ற எதிர்மறையான நிகழ்வுகளை அழிக்க முருகனின் வேல் துணை நிற்பதோடு செவ்வாய் கிரகத்தின் தீய விளைவுகளையும் குறைக்க உதவி செய்யும்.

கடன் தொல்லையை நீக்கி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக் கூடிய தன்மை இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு ஏற்படும்.

எனவே வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி புதன்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை நீங்கள் பூஜைகள் செய்வதின் மூலம் மிகச் சிறப்பான மேற்கூறிய பலன்களை அடைய முடியும்.