• November 8, 2024

என்னது… காதலனின் வரவை எதிர்நோக்கி..! சுவரில் கோடிட்டு எண்ணும் பழக்கமா? – நற்றிணை என்ன சொல்லுது..

 என்னது… காதலனின் வரவை எதிர்நோக்கி..! சுவரில் கோடிட்டு எண்ணும் பழக்கமா? – நற்றிணை என்ன சொல்லுது..

Narrinai

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை 9 அடி முதல் 12 அடிவரை அமைந்த நானூறு பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும். இதில் 234 ஆம் பாடல் மட்டும் முழுமையாக கிடைக்கவில்லை.

 

175 புலவர்களால் பாடப்பட்ட இந்த நற்றிணை நூலை தொகுத்தவர் யார் என்பதும் இதுவரை தெரியவில்லை. இந்த நற்றிணையை நல் எனும் அடைமொழியையும், அகப்பொருள் பற்றி கூறும் நூல்களாக உள்ளதால் திணை என்ற பெயரையும் சேர்த்து நற்றிணை என்று கூறுகிறோம்.

Narrinai
Narrinai

இந்த நூலானது பண்டைய மக்களிடம் பரவி கிடந்த பழக்கவழக்கங்கள் முழுவதையும் மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் அந்த காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களின் சிறப்பு பற்றியும் அவர்களின் கொடை திறன் பற்றியும் விளக்குகிறது.

 

இதில் அகவாழ்வு பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புலவர்கள் அவர்களின் உவமைத்திறன், உள்ளுறை உவமம் போன்றவற்றை மிகச் சிறப்பான முறையில் அகவாழ்வில் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

 

அந்த வகையில் காதலன் பிரிவால் வருந்தும் தலைவி காதலனின் வரவை எதிர்பார்த்து சுவரில் கோடிட்ட நிகழ்வுகள் அன்றே நடந்திருக்கிறது என்று நற்றிணை எடுத்து காட்டுகிறது.

 

இன்று பல்லி சயனம் சொல்லுவதை எப்படி மக்கள் உண்மை என்று நம்புகிறார்களோ, அதுபோலவே காதலன் வரவை பற்றி பல்லி கருத்து கூறக்கூடிய நம்பிக்கை அன்றே இருந்துள்ளது.

 

தலைவி தலைவனுக்காக காத்திருக்கின்ற அன்பை கற்பனை வளத்தோடு மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

 

மேலும் இந்த நற்றிணையில் தோழி கூற்றில் 218 பாடல்களும் தலைவி கூற்றில் 92 பாடல்களும் தலைவன் கூற்றாக 90 பாடல்களும் செவிலித்தாய் கூற்றுக்களாக 11 பாடல்களும் இடம் பிடித்துள்ளது.

Narrinai
Narrinai

தலைவன், தலைவிக்காக ஏங்குவதும், தலைவி, தலைவனுக்காக ஏங்குவதும், போன்ற பாடல்கள் இன்று இருக்கும் சினிமா பாடல்களை விட மிக மிக நேர்த்தியான கற்பனை வளத்தோடு உள்ளது.

 

அது இல்லாமல் பெண்கள் அன்றே கால்பந்தாட்டம் ஆடி அதற்கான குறிப்புகள் நற்றிணையில் கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது வியப்பு கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இத்தகைய சிறப்பு மிக்க நற்றிணையை அனைவரும் ஒருமுறை படித்துப் பார்த்தால் கட்டாயம் உங்களுக்குள் காதல் ஊற்றெடுக்கும் என்று கூறலாம்.