• July 27, 2024

தமிழர் வழிபாட்டில் ஏழு கன்னிமார்கள் யார்? இவர்கள் தான் சப்த கன்னியரா?

 தமிழர் வழிபாட்டில் ஏழு கன்னிமார்கள் யார்? இவர்கள் தான் சப்த கன்னியரா?

kannimar

சப்த கன்னியரே ஏழு கன்னிமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, இந்திராணி, நரசிம்மி, வராகி, சாமுண்டி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.

பொதுவாக சிவ தலங்களில் இந்த சப்த கன்னியர் முதல் பிரத பிரகாரத்தில் வலது காலை தொங்க போட்டு, இடது காலை மடித்து அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பார்கள்.

இதில் பிராமி அம்பிகையின் முகத்தில் இருந்து தோன்றியவள். பிரம்மனின் மனைவியாக திகழ்ந்தவள். இதனால் தான் ராணிக்கு அன்ன வாகனம் உள்ளது.

இரண்டாவதாக மகேஸ்வரி இந்த மகேஸ்வரி தேவியின் தோளில் இருந்து தோன்றியவள். சிவனின் வாகனம் என்பதால் இவளுக்கு உரிய வாகனம் எருது ஆகும்.

மூன்றாவதாக வருபவள் கௌமாரி இவள் முருகனின் மனைவி.  இவளுக்கு உரிய வாகனம் மயில்.

நான்காவதாக வைஷ்ணவி தேவியின் கைகளில் இருந்து தோன்றிய இவள் விஷ்ணுவின் மனைவி என்பதால் இவளின் வாகனம் கருட வாகனம் ஆகும்.

ஐந்தாவதாக இந்திராணி இந்திரனின் மனைவியாக இவள் வெள்ளை யானை வாகனத்தைக் கொண்டிருக்கிறாள். கடைசியாக இருக்கும் வராகி, சாமுண்டிக்கு இணையான ஆண் தெய்வங்களை இல்லை எனக் கூறலாம். அதனால் தான் வராகிக்கு சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று தெய்வங்களை கூறுகிறார்கள்.

முரட்டு குணம் படைத்த தெய்வம் என்பதால் எருமை கெடாவை வாகனமாகக் கொண்டு கைகளில் உலக்கையும் கலப்பையும் வைத்திருப்பாள். தவறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுப்பதால் இவரை தண்டினி என்றும் அழைக்கிறார்கள்.

அடுத்ததாக நரசிம்மி இவரை சிலர் சாமுண்டி என்றும் கூறுவார்கள். இந்த சாமுண்டியை பிடாரி என்று கூறி வணங்குபவர்களும் உண்டு. ஊருக்கு ஒரு அய்யனாரும், ஒரு பிடாரியும் இருக்க வேண்டும் என்பது நாட்டுப்புற மரபாகும்.

ஏரியைக் காக்க அய்யனாரும் ஊரைத் காக்க பிடாரியும் அருள் புரிவார் என்பது இன்று வரை உள்ள நம்பிக்கை. தமிழகத்தை பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆட்சி செய்த காலத்தில் பிடாரிக்கு கோயில்கள் கட்டப்பட்டதாக கல்வெட்டு சான்றுகள் அதிகளவு காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட சப்த கன்னிகர் வழிபாடு தான் கன்னிமார் வழிபாட்டிற்கு மூலம் என்று கூறுகிறார்கள்.

மேலும் தாந்திரீக சைவ மரப்பின் பெண் தெய்வங்களின் உருவ சிலைகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல வடநாட்டில் குமாரகுப்தா ஆட்சி காலத்தில் அதாவது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கந்த வழிபாடு தனி வழிபாடாக வளர்ந்த போது சப்த கன்னியரை கந்தனுக்கு தாய்மாராக கூறி இருக்கிறார்கள் பெண்கள் என அழைக்கப்பட்டார்கள்.

மேலும் கிபி ஏழாம் நூற்றாண்டில் சப்த கன்னிகரை சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திர கூட்டத்தோடு தொடர்பு படுத்தி பேசும் வழக்கமும் இருந்துள்ளது. இவை சங்க இலக்கியங்களில் 

“அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங்குடி போல..” 

நற்றிணையில் இந்த செய்திகளில் காணப்படுகிறது. ஆனால் இந்த ஆறு நட்சத்திரங்கள் கொண்ட கூட்டம் தான் சப்த கன்னியர் என்றோ, கார்த்திகை பெண்கள் என்றோ அதில் குறிப்புகள் ஏதும் இல்லை.

பௌத்த சமயம் பரவி இருந்த காலம் முதற்கொண்டு சப்த கன்னியரை இந்திரனின் சகோதரியாக பாவித்து விழாக்களில் கொண்டாடியிருக்கிறார்கள். அது போலவே சைவம் எழுச்சி பெற்ற சமயத்திலும் சப்த கன்னிகருக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த சப்த கன்னியர்கள் என்று அழைக்கப்படும். கன்னிமார்களை அரசவை தெய்வங்களாக போற்றி இருக்கிறார்கள் நான்காம் நூற்றாண்டில் மத்திய பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட குகை கோயில்களில் ஏழு கன்னிகளின் உருவக்கரையை அங்கு செதுக்கப்பட்டு இருக்கும் குகைகளில் நீங்கள் காணலாம்.

இன்னும் சில மாநிலங்களில் சப்த கன்னி வழிபாடு என்பது அமாவாசை தினத்தன்று நடைபெறுகிறது. வயிற்றில் இருக்கும் சிசுவையும் பிறந்த குழந்தையை அளிக்கக்கூடிய தன்மை  கடவுள்களுக்கு உள்ளது என்ற கருத்தால் இளம் தாய்மார்கள் இந்த தெய்வத்தை வழிபடுவதை தவிர்த்தார்கள்.

இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் சப்த கன்னியர்கள் யார் என்றும் அவர்களின் வரலாறு என்னவென்று. கன்னிமார்களும் அவர்களும் ஒன்றுதான் என்ற நிலை இன்று வரை விளங்காத புதிராகவே உள்ளது.