• September 12, 2024

“ஆன்மீகத்தில் சிறப்பு பெற்ற அரச மரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் என்ன?” – விரிவான விளக்கம்..

 “ஆன்மீகத்தில் சிறப்பு பெற்ற அரச மரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் என்ன?” – விரிவான விளக்கம்..

Arasamaram

இந்துக்களின் வழிபாட்டு முறையில் மரங்களுக்கு என்று ஓர் சிறப்பான இடம் உள்ளது. பொதுவாக இந்துக்கள் வேப்பமரம், அரசமரம், வில்வமரம் போன்ற பல மரங்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் புராணங்களில் மிகவும் புனிதமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் அரச மரம் பற்றிய விரிவான கருத்துக்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

Arasamaram
Arasamaram

உங்களுக்கு நன்றாக தெரியும், கௌதம புத்தர் அரச மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றதால் அந்த மரத்தை போதிமரம் என்று அழைத்தார்கள். எனவே இந்த அரச மரமானது மனிதர்களுக்கு மகத்தான ஆற்றலை தரக்கூடிய சக்தி படைத்தது.

நீங்கள் நன்றாகவே பார்த்திருப்பீர்கள். இன்றும் கிராமங்களில் மக்கள் கூட கூடிய தெருமுனைகளில் நிச்சயமாக அரச மரம் இருக்கும். இப்படி ஊர் பகுதிகளின் மையத்தில் இது போன்ற அரச மரங்களை நட்டு நமது முன்னோர்கள் வழிபட்டதின் காரணம் என்ன என்று தெரியுமா?.

பொதுவாகவே மற்ற மரங்களை விட இந்த அரச மரத்திற்கு அதிக அளவு ஆக்சிஜனை வெளிப்படுத்தக்கூடிய திறன் உடையதால், நெருக்கடியான இடங்களில் மனிதர்கள் கூறும் போது அவர்களுக்கு தூய்மையான காற்றினை அளிக்க இது வழிவகை செய்யும்.

Arasamaram
Arasamaram

அதுமட்டுமல்லாமல் ஆயுர்வேதத்தின்படி இந்த அரச மர காற்றானது கை கால் வலிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகளை நீக்கக்கூடிய சக்தி படைத்ததால் இந்த மரத்தின் பல்வேறு பகுதிகளை மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

விஷ ஜந்துக்களை எளிதில் அண்ட விடாத குணத்தைக் கொண்டிருப்பதால் தான் இது கோயில்களில் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. புராணத்தின் படி அரச மரத்தின் வேரில் விஷ்ணு வசிப்பதாகவும், மரத்தண்டில் கிருஷ்ணர் இருப்பதாகவும், கிளைகளில் நாராயணன் வாசம் செய்வதாகவும் கருதப்படுகிறது.

கர்ப்பப்பையில் பிரச்சனை இருக்கக்கூடிய பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது அதன் காற்று கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய அசுத்தத்தை நீக்கக்கூடிய தன்மை கொண்டிருப்பதால் தான் அதிகாலை நேரத்தில் பெண்களை அரச மரத்தை சுற்ற சொல்லி இருக்கிறார்கள்.

இதன் மூலம் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் நீங்கி அவர்கள் எளிதில் பிள்ளை பேறு அடைய முடியும் என்பது இன்று வரை இருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை என கூறலாம்.

Arasamaram
Arasamaram

மேலும் உடலுக்கு தேவையான தூய ஆக்சிஜனை பெறுவதன் மூலம் உடல் புத்துணர்வு அடைவதோடு மட்டுமல்லாமல், நமது மூளையும் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு இந்த அரச மர காற்று பேர் உதவியாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் ஆஞ்சநேயர் கோயில்களில் இருக்கும் அரச மரத்தை மிகவும் சிறப்பு வாய்ந்த சக்தி வாய்ந்த மரமாக கூறியிருக்கிறார்கள். இந்த மரத்தை சுற்றி வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்பது இன்றுவரை மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது.

எனவே தான் நமது முன்னோர்கள் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், பார்வதி தேவி ஆகிய தெய்வங்களுக்கு அரச மரத்தை முக்கிய விருட்சமாக வைத்து மக்களை வழிபட வைத்துள்ளார்கள்.