• October 8, 2024

 “ஆரிய இனத்தின் எச்சம்..!” – அதுவும் காஷ்மீர் லடாக் பகுதியில்..

  “ஆரிய இனத்தின் எச்சம்..!” – அதுவும் காஷ்மீர் லடாக் பகுதியில்..

Aryas

இந்த உலகிலேயே உயர்ந்த இனமாக கருதப்பட்ட ஆரிய இனம் இன்றும் காஷ்மீர் பகுதியில் உள்ளதாக மர்மான கருதப்படுகிறது. இந்த ஆரியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிளம்பி ஹைபர், போலர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஆரிய இனம் மட்டும்தான் உலகில் மிகச்சிறந்த இனம் என்று கருதித்தான் சர்வதிகாரி ஹிட்லர், யூத இனத்தை பூண்டோடு தன் நாட்டிலும் தான் பிடித்த நாடுகளிலும் அழித்தார்.

Aryas
Aryas

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லடாக் பகுதியில் ஆறடிக்கும் குறையாத உயரத்தோடு, சிவந்தமேனியும், கூர்மையான முக அமைப்பு, நீலக் கண்களும் கொண்ட மனிதர்களை ஆரியர்கள் என்று கூறுகிறார்கள். இவர்களின் பூர்வீகம் கில்கித் என்று கூறப்படுகிறது.

மேலும் இவர்களை அலெக்சாண்டரின் வாரிசுகள் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்து வரும்போது சிலர் இமாலய பகுதியில் தங்கி விட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தான் நாங்கள் எங்களது உடையும் அவர்களின் உடையை போலவே இருக்கும் என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த தூய ஆரியர்கள் எனப்படும் மக்களைப் பற்றி ஆய்வுகளை பலரும் மேற்கொண்டு வருகிறார்கள்.  இவர்களின் பூர்வீகம், பண்பாடு ஆகியவற்றையும் ஆர்வத்தோடு ஆய்வு செய்து வர ஜெர்மனியில் இருந்து பல பேர் வருகிறார்கள்.

Aryas
Aryas

மேலும் இங்கு வாழக்கூடிய மக்களின் வழிபாடு முறை கோமாதா வழிபாடு பார்ப்பன இன பண்பாட்டை ஒத்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் மகாபாரதம் மற்றும் இந்து ஓவியங்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்கள்.

ஆடு, மாடு போன்றவற்றை மேய்க்க வந்த ஆரிய கூட்டம் இங்கிருந்த பெண்களுடன் கலந்து தான் இந்தோ ஆரிய இனம் உருவானது. எனவே தான் கிரேக்கர்களின் டிஎன்ஏ வை ஒத்த டிஎன்ஏக்கள் வட இந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் காணப்படுவதாக சில ஆய்வுகள் ஆதாரத்தோடு விளக்குகிறது.

Aryas
Aryas

எனவே லடாக் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ஒரு சமயம் தூய ஆரியர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது என்பதை இதன் மூலம் நாம் உறுதி செய்ய முடியுமா? என்பது சந்தேகம்தான்.

எனினும் இதற்கு உரிய உண்மையான பதிலை காலம் தான் நமக்கு ஆதாரத்தோடு எடுத்துக் கூற வேண்டும். எனவே உங்களுக்கும் இது போன்ற கருத்துக்கள் ஏதேனும் தெரிந்திருந்தால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.