
Pattinathar
பதினெண் சித்தர்களின் ஒருவராக கருதப்படுகின்ற பட்டினத்தார், பட்டினத்து பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார். காவிரி பூம்பட்டினம் சோழர்கள் காலத்தில் வணிகர்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இந்தப் பகுதியில் கிபி 11ஆம் நூற்றாண்டில் சிவனேசர் எனும் வணிகர் ஞானக்கலை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவருமே திருவெண்காட்டு சிவனிடம் அதீத பக்தியோடு விளங்கி இருக்கிறார்கள். இதனை அடுத்து இவர்களுக்கு பிறந்த பிள்ளை கூட திருவெண்காட்டி ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என்ற பெயரை சூட்டினார்கள்.
இந்த குழந்தையை திருவெண்காட்டார் என்றும் அழைத்தார்கள். சிவநேசர் மிகப்பெரிய வணிகர் என்பதால் மன்னருக்கு சமமான மாளிகைகளும், ஆடம்பரமான வசதிகளோடும் வாழ்ந்து இருக்கிறார்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Rajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
மேலும் சுவேதவனப் பெருமான் உடன் ஒரு சகோதரியும் இருக்கிறாள். பருவம் வந்தவுடன் சகோதரிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதனை அடுத்துசுவேதவனப் பெருமானுக்கு சிவக்கலை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். இருவரும் சீரிய முறையில் இல்லறம் நடத்திய போதும் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது.
இதனை அடுத்து இருவரும் திருவிடைமருதூர் சென்று ஈசனை வணங்கி விரதம் இருந்தார்கள். அந்த சமயத்தில் அதே ஊரில் சிவ சருமர் என்ற அந்தணர் வறுமையில் வாடி வந்திருக்கிறார். வறுமையில் இருந்த போதும் ஈசன் கருணை இவருக்கு இருந்ததின் காரணத்தால் கடவுளே, குழந்தையாக அவர் முன் தோன்றி மருதவாணன் என்ற பெயரை தனக்கு இட்டு காவிரிப்பூம்பட்டிடத்தில் இருக்கும் சுவேதவனப் பெருமானிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறார்.
மேலும் அந்த குழந்தையை பிரிய மனம் இல்லாமல் ஈசன் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவதற்காக சுவேதவனப் பெருமானிடம் ஒப்படைக்க காவிரிபட்டினம் நோக்கி சென்று அந்த குழந்தையை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தைக்கு மருதவாணர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
மற்றொரு கதையில் இந்த குழந்தையானது ஈசனின் கோயிலில் இருந்த மருத மரத்தின் அடியில் இருந்து பெறப்பட்டதால்தான் மருதவாணர் என்ற பெயர் சூட்டப்பட்டதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் மருதவாணராக வளரும் குழந்தை இறைவன் என்ற உண்மை தெரியாத சுவேதவனப் பெருமான் தன் மகனை வணிகத்தில் ஈடுபடுத்தினார். வணிக கப்பலோடு வெளிநாட்டுக்குச் சென்று வணிகம் செய்து வந்த மருதவாணன் நிறைய பொருட்களைக் கொண்டு வந்திருப்பார் என்று எதிர்பார்த்தார் சுவேதவனப் பெருமான் என்ற திருவெண்காடர்.

ஆனால் அவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. இதற்கு காரணம் ஓலை துணுக்கு ஒன்றும் காதற்ற ஊசி ஒன்றும் தான் அதில் இருந்தது. மேலும் கப்பலில் ஏரு, விரட்டியும், தவிடு நிரம்பி இருந்ததை பார்த்து கோபம் கொண்டார்.
இதனை அடுத்து அந்த ஓலையில் எடுத்து படித்துப் பார்க்கும்போது “காது அற்ற ஊசியும் வாராது கால் கடை வழிக்கு” என்று அதில் எழுதப்பட்டிருப்பதை பார்த்து எத்தனை செல்வங்கள் சேர்த்து என்ன பயன், இதை எங்கு கொண்டு போய் போட போகிறோம். எதுவும் இல்லை அனைத்தும் மாயை என்பதை அறிந்து கொண்டு உடனடியாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
துறவியாக மாறி தனது சொத்துக்களை விட்டு விட்டு வெளியேறிய இவரால் தன் சொத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று நினைத்த சொந்த சகோதரி அவர் உண்ணக்கூடிய அப்பத்தில் விஷத்தை வைத்துக் கொடுக்க அதை அறிந்து கொண்ட சுவேதவனப் பெருமான் என்கிற திருவெண்காடர் அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் சொருகி விட்டு “தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்” என்று கூறி நகர்ந்து விட்டார்.
அடுத்து அந்த வீட்டுக் கூரை தீப்பற்றி எரிய பக்கத்தில் இருந்தவர்களும் உறவினர்களும் பட்டினத்தார் சக்தியை அறிந்து கொண்டு இவரை ஒரு சித்தர் என்று வணங்கினார்கள்.
தனது தாயார் இறந்த சமயத்தில் சரியான நேரத்திற்கு அங்கு வந்து பச்சை வாழை மட்டைகளையும், இலைகளையும் போட்டு மனது உருகி அன்னையை எண்ணி பாடிய பாடல் வரிகள்

ஐயிரண்டு திங்களால் அங்கமெல்லாம் நொந்து
பெற்று பையலென்ற என்ற போதே
பரிந்தெடுத்துச் செய்ய இரு கை புறத்தில் ஏந்தி
கனக முளை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன்
இனி முந்தி தவம் கிடந்து …
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்..
இதனை அடுத்து பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. இதனைப் பார்த்து அனைவரும் திகைத்தார்கள்.
மேலும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து படி பட்டினத்தார் மற்றும் பட்டினத்தடிகள் இருவரும் வேறு, வேறு நபர்கள் என்று கூறுவதற்கு காரணம், இருவரது பாடல்களிலும் பெரும் வேறுபாடு உள்ளது. எனவே இந்த வேறுபட்ட பாடல்களை பின்னாளில் வேறு யாரேனும் பாடி தொகுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.