• October 5, 2024

நடிகர் கார்த்தி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

 நடிகர் கார்த்தி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான திரு கார்த்திக் அவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. பருத்திவீரன் மூலம் அறிமுகமாகி பின் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் மூலம் புகழ்பெற்ற கார்த்திக் சிவக்குமார் அவர்களுக்கு இன்று இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவர் ஜூலை 3, 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமையாள் என்ற ஒரு மகள் உண்டு. பின்பு ஏழு வருடங்களுக்குப் பிறகு இன்று 2020இல் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் மிக்க மகிழ்ச்சியோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.