
earth
இந்த பூமியின் மையத்தில் என்ன இருக்கு என்பதை கண்டுபிடிக்க 160 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற புவியியல் பேராசிரியர் ஓட்டோ லிடன்ப்ராக் முயற்சி செய்தார். இதற்கு உறுதுணையாக 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சக பயணியின் குறிப்புக்கள் அவரிடம் இருந்தது. மேலும் இவருக்கு உறுதுணையாக இவரது மருமகன் ஆக்சலுடன் இணைந்து பூமியின் மையப் பகுதியை கண்டுபிடிக்கும் பணியை துவங்கினார்.
இதற்காக இவர் ரகசிய குகை பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல், இருவரும் சேர்ந்து ஐஸ்லாந்துக்கு சென்றார்கள். அங்கு இருக்கக்கூடிய பூர்வ குடியை சேர்ந்த ஹான்ஸ் ப்யெல்கேயை வழிகாட்டியாக தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த பயணத்தை தொடங்கினார்கள்.
இதனை அடுத்து எந்த மூவரும் பழைய எரிமலைக்குள் இறங்கி சூரிய வெளிச்சமே இல்லாத ஒரு கடலுக்குள் சென்று அங்கிருக்கும் ஒளிரும் பாறைகள், ஆதிகால காடுகள், அங்கு வாழும் அற்புதமான உயிரினங்களை கண்டுபிடித்தார்கள்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
மேலும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜூல்ஸ் வெர்னின் எழுதிய பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (Journey to the center of the Earth) எனும் நூலில் பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை கற்பனையில் எழுதி இருப்பார்.
அதைப்போலவே சுமார் 6371 கிலோ மீட்டர் அளவு பூமிக்குள் சென்றால் அங்கு எப்படி இருக்கும் என்பதை விரிவாக இனி பார்க்கலாம். பூமியானது பல அடுக்குகளால் ஆனது என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் பூமியின் மேற்பரப்பில் அதிக அளவு உயிரினங்கள் உள்ளது.
இதனை அடுத்து ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் சில விலங்குகள் வலைகளை உருவாக்கி வாழும் தன்மையோடு உள்ளது. உதாரணமாக எலி, பெருச்சாளி போன்றவற்றை கூறலாம். அதுபோலவே பூமியின் அடிப்பகுதியில் சில முதலைகளும் உயிர் வாழும் அதற்கு உதாரணமாக நாம் நைல் பகுதிகளில் இருக்கின்ற முதலைகளை கூறலாம். இவை சுமார் 12 மீட்டர் ஆழம் வரை குழி தோண்டி உயிர் வாழும்.
கிமு 370 ஆம் ஆண்டு துருக்கி பகுதியில் நிலத்தடியில் ஒரு புராதான நகரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகரமானது “எலெங்குபு” என்ற பகுதியில் உள்ளது. என்ன நகரம் தான் பூமியின் மேற்பரப்பிலிருந்து 85 மீட்டர் ஆழத்தில் இருந்துள்ளது.

இங்கு நிலத்தடி சுரங்கப் பகுதியில் இருபதாயிரம் மக்கள் வசிக்கலாம் என தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த நகரம் உலகின் ஆழமான சுரங்கங்களில் ஒன்று எனக் கூறலாம்.
இதைப் போலவே தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஒரு தங்க சுரங்கத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளிகள் அங்கு புழுக்கள் வாழ்வதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு கீழ் தோண்டும் போது வெறும் துளைகளே தெரிந்து உள்ளது. இதை நீங்கள் ரஷ்யாவில் இருக்கக்கூடிய கோலா கிணறில் பார்க்க முடியும்.
அங்கிருக்கும் உள்ளூர்வாசிகள் “நரகத்தின் நுழைவாயில்” என்று கூறி வருகிறார்கள். மேலும் அங்கு சில நேரங்களில் சத்தம் கேட்பதாகவும் அது ஆத்மாக்கள் சித்திரவதை அனுபவிக்கும் போது ஏற்படக்கூடிய சத்தங்கள் என்று கூறுகிறார்கள்.
இதனை அடுத்து பூமிக்கு அடியில் 30 முதல் 50 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள அடுக்கை மேண்டில் என்று கூறுகிறோம். இது பூமியின் அளவிலிருந்து சற்று பெரியது மேலும் இதன் அளவு 82% ஆகவும் இதனுடைய எடை 65% ஆகவும் உள்ளது.
சூடான பாறைகளாக இருக்கக்கூடிய இவை வருடத்திற்கு சில சென்டிமீட்டர் அளவு நகரக்கூடிய தன்மையில் உள்ளது. இதன் காரணத்தால் இதன் மேல் பூகம்பங்கள் உருவாகலாம் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் பூமிக்கு அடியில் மிகப்பெரிய பெருங்கடல்கள் இருந்திருக்கலாம். மேலும் அது பிரகாசமான கடலாகவும் இருக்கலாம். எனினும் அதில் ஒரு துளி கூட தண்ணீர் இல்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
இதனை அடுத்து பூமிக்குள் இன்னும் ஆழமாக போகும் போது அதிகமாக அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக மிகப் பழக்கமான பொருட்கள் கூட நமக்கு அங்கு விதித்திரமாக தெரியும். மேலும் இங்கு சுழன்று கொண்டே இருக்கக்கூடிய பாறைகள் கடினத் தன்மை இல்லாமல் இலகுவாக நமக்கு தோன்றும். பூமியின் மேற்பரப்பில் கிடைக்காத கனிமங்களும் தாது பொருட்களும் இங்கு இருக்கும்.
இந்தப் பகுதியில் கிடைக்கும் பிரிட்ஜ்மனைட் மற்றும் டேவ் மாவோயிஸ்ட் போன்ற தாதுக்களை பூமியின் மேல் பகுதிக்கு கொண்டு வந்தால் கூட அவை சிதைந்து விடும். இன்னும் பூமிக்கு கீழே 2900 கிலோமீட்டர் கடந்து சென்றால் நாம் மேண்டிலின் கடைசி பகுதிக்கு வந்து விடுவோம்.
இதனை அடுத்து பூமிக்குள் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை காட்டிலும், உயரமான வடிவங்களை நீங்கள் பார்க்கலாம். இவை பூமியின் பரப்பில் ஆறு சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
அடுத்து பூமியின் உள் மையத்தில் சூரியனின் மேற்பரப்பை போல் சூடாகவும், சந்திரனை விட சற்று சிறிய அளவிலான இரும்பு மற்றும் நிக்கல் உலோகத்தால் ஆன ஒரு அடர் கனமான பந்து உள்ளது என கூறலாம்.
மேலும் பூமிக்கு அடியில் திரவ உலோகத்தில் ஆன ஒரு கடல் உள்ளது. இந்த கடல் ஒரு காந்த புலத்தை உருவாக்கியது. இந்த காந்தபுலமானது சூரிய கதிர்வீச்சின் பெரும் பகுதியிலிருந்து வளிமண்டலத்தை அழிக்க வல்ல அணு துகள்களின் ஓட்டத்தில் இருந்து பூமியை பாதுகாக்கிறது.

அழுத்தம் அதிகமாக இருப்பதால் உலோகங்கள் படிமமாகி, நமது கிரகத்தின் மையத்தில் ஒரு திடமான கோளை உருவாக்குவதால் இந்த இடத்தை நோக்கி நாம் செல்லவே முடியாத ஒரு பயங்கரமான பகுதி என கூறலாம்.
சுமார் 6000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை கொண்டு இருக்கும் இதனுடைய அழுத்தம் மூன்று புள்ளி ஐந்து மில்லியன் மடங்கு அதிகமாக இருக்கும். எனவே இங்கு எந்த ஒரு ஆய்வு கருவியும் பயன்படுத்த முடியாது.
எனவே ஒரு திரவ உலோக கடலில் மூழ்கி இருக்கும் ஒரு கடினமான கோளம் நமக்கு புரியாத புதிராகவே உள்ளது என கூறலாம். சீனா போன்ற நாடுகள் பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதை துளை போட்டு ஆராய்ந்து வரும் வேளையில் இந்தப் புதிருக்கான விடை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.