• October 7, 2024

ஸ்பைடர் மேன் பாணியில் சுவற்றில் ஏறும் சிறுமி !!!

 ஸ்பைடர் மேன் பாணியில் சுவற்றில் ஏறும் சிறுமி !!!

ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் வருவதைப் போல 5 வயது சிறுமி தனது வீட்டில் உள்ள சுவற்றில் சிலந்தி போல ஏறும் வீடியோவானது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோவானது பல லட்சம் நெட்டிசன்கள் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் கட்டில் மேல் நின்று கொண்டு இருந்த அந்த சிறுமி எந்த ஒரு துணையும் இல்லாமல் தன் இரு கைகளையும் கால்களையும் வைத்தே சுவற்றில் ஊன்றி அறையின் மேற்கூரை வரை செல்கிறார். எந்தவித பயமுமின்றி சிரித்துக்கொண்டே இச்சம்பவத்தை அந்த சிறுமி செய்துள்ளது பார்ப்பவர்களுக்கு வியப்பூட்டுகிறது.

மேற்கூரையில் இருந்து மீண்டும் கீழே இறங்குவதற்குள் யாருடைய உதவியையும் இந்த சிறுமி எடுத்துக் கொள்ளவில்லை. எப்படி சிலந்தி போல மேலே ஏறினாளோ அதே போலவே கீழ் நோக்கியும் இறங்கி வந்துள்ளார் இந்த சுட்டி சிறுமி.

Spider-Girl: Who is the Daughter of Spider-Man? | CBR

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த சிறுமியை நிஜ வாழ்க்கையின் ஸ்பைடர் மேன் என குறிப்பிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் இந்த சிறுமிக்கு ஸ்பைடர் Girl எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.

சிலந்தி போல சுவற்றில் ஏறும் சிறுமியின் வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழன் இணைந்திருங்கள்.