அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் !!!

அன்பு என்றுமே அளக்க முடியாதது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சிறுவன் ஒரு பூனைக்குட்டிக்கு தான் வைத்திருக்கும் உணவை கொடுக்கும் வீடியோ காட்சி பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த 18 வினாடி வீடியோவில் Sharing is Caring என Caption குறிப்பிடப்பட்டுள்ளது. சக மனிதர்களின் பசியாற்றவே பலருக்கு மனம் இறங்கி வராத இந்த காலகட்டத்தில் பூனைக்கு உணவளிக்க வேண்டும் என்று நினைத்த அந்த சிறுவனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

கையில் தின்பண்டத்தை கொண்டு பூனைக் அருகில் நடந்து வந்த சிறுவன் அந்த பூனையை சில நொடிகள் பார்த்த படியே நின்று கொண்டிருந்தான். பின் தன் கையிலிருந்த தின்பண்டத்தை பூனைக்கு அருகில் எடுத்துச் சென்றான்.

அந்தப் பூனைக்கு தன் கையால் சிறுவன் தின்பண்டத்தை ஊட்டி விட்டதை யாரோ வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். ட்விட்டரில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை பல ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும் போது அன்பு எனப்படுவது மதங்களையும் இனங்களையும் தாண்டிய ஒரு சுவாரசியமான உணர்வு என்பதை உணர்த்துகிறது.

பூனைக்கு உணவளிக்கும் சிறுவனின் வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.

Sha