• October 12, 2024

ஒரு நாள் Collector ஆன Ahmedabad சிறுமி !!!

 ஒரு நாள் Collector ஆன Ahmedabad சிறுமி !!!

Brain Tumor எனப்படும் மூளைக் கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஃப்ளோரா எனும் சிறுமியை ஒரு நாள் கலெக்டராக அமர வைத்த அதிசயம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றவே அஹமதாபாதில் உள்ள ஆட்சியர் சந்திப் சங்கிலி நிறைவேற்றியுள்ளார்.

11-year-old becomes Ahmedabad district collector for a day | Ahmedabad News  - Times of India

மூளை கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்த பிறகு சற்று நிலைகுலைந்து போயிருந்த சிறுமி Flora-வுக்கு சிறுவயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. சிறுமியின் ஆசையை பற்றி Make a Wish Foundation ஆட்சியர் சந்தீப்பிடம் கூறியுள்ளனர்.

சிறுமியின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார் கலெக்டர் சந்தீப். ஒரு நாளுக்கு மட்டும் Flora-வை ஆட்சியர் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். அது மட்டுமின்றி இந்த ஆசையை அந்த சிறுமியின் பிறந்த நாளான செப்டம்பர் 25-ம் தேதி நிறைவேற்றி வைத்துள்ளார்.

சிறுமியை வாழ்த்திய பின்பு ஆட்சியர் சந்தீப், “விரைவில் குணமடைந்து Flora தனது கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டுகிறேன். இந்த ஆசையை நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் நன்றி.”, என தெரிவித்துள்ளார்.

ஏழாம் வகுப்பு படிக்கும் Flora-வுக்கு கட்டி கண்டறியப்படும் வரை அவர் நன்றாக படித்து வந்தார் என அவரது தந்தை கூறியுள்ளார். மேலும் ஒருநாள் கலெக்டராக Flora-வை அமர வைத்ததற்கு ஆட்சியர் சந்தீப்பிற்கு தனது நன்றிகளை Flora-வின் தந்தை தெரிவித்தார்.

சிறுமி Flora ஆட்சியர் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்கள் Deep Talks தமிழுடன் இணைந்து இருங்கள்.